உன்னால தான் நான் கர்ப்பமா இருக்கேன்.. கதறிய கல்லூரி மாணவி.. மனம் இறங்காத காதலன்.. இறுதியில் நடந்தது என்ன?
காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்தவர் வாசுராஜா (23). இவர், நாமக்கல்லில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் படித்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வாசுராஜா நெருங்கி பழகி வந்துள்ளார்.
சமயம் கிடைக்கும் நேரத்தில் அடிக்கடி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால், அந்த மாணவி கர்ப்பமடைந்தார். இந்நிலையில் அந்த மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வாசுராஜாவிடம் வலியுறுத்தினார். ஆனால் ஏதோ சாக்கு போக்கு சொல்லி திருமணம் செய்துகொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் தன் காதலியை சந்திப்பதையும், அவருடன் பேசுவதையுமே தவிர்த்தார். இறுதியில் ஏமாற்றப்படுவதை உணர்ந்த கல்லூரி மாணவி சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வாசுராஜாவை கைது செய்தார்.