- Home
- குற்றம்
- லாட்ஜிக்கு வரவழைத்து இளம்பெண் வாய்க்குள் வெடிபொருள் வைத்து கொ*! கள்ளக்காதலன் வெறிச்செயல்! நடந்தது என்ன?
லாட்ஜிக்கு வரவழைத்து இளம்பெண் வாய்க்குள் வெடிபொருள் வைத்து கொ*! கள்ளக்காதலன் வெறிச்செயல்! நடந்தது என்ன?
கேரளாவைச் சேர்ந்த சுபாஷின் மனைவி தர்ஷிதா, கள்ளக்காதலன் சித்தராஜுவுடன் சேர்ந்து 30 பவுன் நகை, ரூ.5 லட்சம் திருடிச் சென்றார். பின்னர், சாலிகிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தர்ஷிதா கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள இரிக்கூர் பகுதியை சேர்ந்தவர் சுமதா. இவரது மகன் சுபாஷ். துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹன்சூர் தாலுகா ஹிரசனஹில் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் தர்ஷிதா (22) திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் தர்ஷிதாவுக்கும் அவரது உறவுக்கார இளைஞரான அதே கிராமத்தை சேர்ந்த சித்தராஜு என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. திருமணமாகி கேரளா சென்ற பிறகும் தர்ஷிதா, சித்தராஜியுடனான தொடர்பை கைவிடவில்லை. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 22ம் தேதி சுபாஷின் வீட்டில் இருந்து 30 சவரன் நகை மற்றும் ரூ. 5 லட்சம் திருடு போனது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே மருமகள் தர்ஷிதாவும் மாயமானாதால் இந்த கொள்ளைக்கும் அவருக்கும் தொடர்பு இருக்கமோ என போலீசாருக்கு சந்தேகம் அடைந்தனர்.
இதனிடையே கர்நாடக மாநிலம் சாலிகிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தர்ஷிதா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கேரள மாநிலம் இரிக்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரது வாய்க்குள் வெடி மருந்தை வைத்து வெடிக்க வைத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனால் அவரது முகம் சிதைந்தது.
லாட்ஜ் அறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த தர்ஷிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்து தர்ஷிதாவின் கள்ளக்காதலன் சித்தராஜுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.