- Home
- Cinema
- Avatar 2 Trailer Leak : ‘அவதார் 2’ டிரைலர் ‘லீக்’ ஆனதும் ஜேம்ஸ் கேமரூன் செய்த சம்பவத்தால் ஆடிப்போன ரசிகர்கள்
Avatar 2 Trailer Leak : ‘அவதார் 2’ டிரைலர் ‘லீக்’ ஆனதும் ஜேம்ஸ் கேமரூன் செய்த சம்பவத்தால் ஆடிப்போன ரசிகர்கள்
Avatar 2 Trailer Leak : அவதார் 2 படத்தின் டிரைலர் நேற்று இரவு திடீரென இணையத்தில் லீக ஆனது. இதையடுத்து ஏராளமானோர் பகிர தொடங்கியதால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது.

டைட்டானிக் படம் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். இதையடுத்து அவர் இயக்கிய அவதார் திரைப்படம் உலக சினிமா ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. கடந்த 2009-ம் ஆண்டு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 2500 கோடி அமெரிக்க டாலருக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதையடுத்து 13 வருட கடின உழைப்புக்கு பின்னர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அவதார் 2. இப்படத்துக்கு அவதார் : தி வே ஆஃப் வாட்டர் என பெயரிடப்பட்டு உள்ளது. உலகளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 16-ந் தேதி உலகமெங்கும் 160 மொழிகளில் வெளியாக உள்ளது.
ஜான் லாண்டாவ் தயாரித்துள்ள அவதார் 2 படத்தில் ஜோ சல்டானா, ஸ்டீபன் லாங், கிளிப் கர்டிஸ், ஜோயல் டேவிட் மூர், சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஜெமைன் கிளெமென்ட், ஜியோவானி ரிபிசி, சிசிஹெச் பவுண்டர், எடி பால்கோ, கேட் வின்ஸ்லெட் அன மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இப்படத்தின் டிரைலர் வருகிற மே 6-ந் தேதி வெளியாக உள்ள டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்கிற ஹாலிவுட் திரைப்படத்துடன் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அவதார் 2 படத்தின் டிரைலர் நேற்று இரவு திடீரென இணையத்தில் லீக ஆனது. இதையடுத்து ஏராளமானோர் பகிர தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த படக்குழு, அதிரடியாக தங்களது சைபர் குழுவை களமிறக்கி, பகிரப்பட்ட அனைத்து வீடியோக்களையும் நீக்கியது. இதை அறிந்த நெட்டிசன்கள் லீக் ஆனாலும் பார்க்க முடியலையே என புலம்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Hansika Hot : டூபீஸில் கன்னாபின்னா கவர்ச்சி காட்டி... மாலத்தீவில் மஜா பண்ணும் ஹன்சிகா- வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.