- Home
- Cinema
- Pongal 2022 : சூர்யா முதல் சிவானி வரை..! பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய பிரபலங்கள் - வைரலாகும் போட்டோஸ்
Pongal 2022 : சூர்யா முதல் சிவானி வரை..! பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய பிரபலங்கள் - வைரலாகும் போட்டோஸ்
பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் - நடிகைகளின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களின் தொகுப்பை தற்போது காணலாம்.

பொங்கல் பண்டிகையை நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகா மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடினார். பாரம்பரிய உடை அணிந்து இருவரும் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
அதேபோல் நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தியும், வேட்டி சட்டையை மடித்துக்கட்டி அண்ணனுடன் சேர்ந்து பொங்கலிட்டு உற்சாகமடைந்தார்.
காதல் பட ஹீரோ பரத் தனது இல்லத்தில் மனைவி மகன்களுடன் பொங்கல் கொண்டாடி உள்ளார். கையில் கரும்புடன் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா மற்றும் மகன் குகன் தாஸ் ஆகியோருடன் வீட்டின் முன் பொங்கல் வைத்து மகிழ்ந்தார்.
மகனை கையில் தூக்கியபடி மகள் மற்றும் மனைவியுடன் போஸ் கொடுத்தவாருஅவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் அருண் விஜய், தற்போது அதில் இருந்து மீண்டு வந்த மகிழ்ச்சியோடு பொங்கல் கொண்டாடி உள்ளார்.
நடிகை சாக்ஷி, பாவாடை தாவணி அணிந்து பொங்கல் வைத்தபடி போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான சிவானி, பட்டு பாவடை சட்டை அணிந்து இரட்டை ஜடை போட்ட படி போஸ் கொடுத்து பொங்கல் வாழ்த்து கூறி உள்ளார்.
நடிகை நிவேதா பெத்துராஜ், மஞ்சள் நிற சுடிதார் அணிந்து கையில் விளக்குகளை ஏந்தியபடி மகிழ்ச்சி பொங்க பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சூரி தனது குழந்தைகளும் வீட்டில் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.