- Home
- Cinema
- Rajinikanth Birthday Celebration: வேஷ்டி சட்டையில்... குடும்பத்தோடு குதூகலமாக பிறந்தநாள் கொண்டாடிய தலைவர்!
Rajinikanth Birthday Celebration: வேஷ்டி சட்டையில்... குடும்பத்தோடு குதூகலமாக பிறந்தநாள் கொண்டாடிய தலைவர்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நேற்று தன்னுடைய 72 ஆவது பிறந்தநாளை தன்னுடைய மனைவி, மகள், பேரன்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் தலைவர் கொண்டாடி மகிழ்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு இவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ஏராளமான பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை நேற்று தெரிவித்திருந்தனர்.
ரசிகர்கள் சிலர், அவரது வீட்டின் முன்னாள் கூடி இரவு 12 மணிக்கே கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் மிகவும் வைரலாக பார்க்கப்பட்டது.
எப்போதும் தன்னுடைய பிறந்தநாள் அன்று வீட்டில் இருப்பதை தவிர்க்கும் ரஜினிகாந்த் இந்த முறை, வீட்டில் தான் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் தன்னுடைய 72 ஆவது பிறந்தநாளை, குடும்பத்தினர் முன்னனிலையில் கேக் வெட்டி மிகவும் பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
தற்போது ரஜினிகாந்த் தன்னுடைய குடும்பத்தினருடன் கேக் வெட்டிய புகைப்படங்கள் மற்றும் அவர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார். மேலும் இந்த பிறந்தநாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய தலைவருக்கு ரசிகர்கள் வாழ்த்தும் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.