Nayanthara : திருமண வேலைகளில் பிசி... கேன்ஸ் பட விழாவுக்கு ‘நோ’ சொன்ன நயன்தாரா
Nayanthara : 75-வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. வருகிற மே 28-ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் ஏராளமான படங்கள் திரையிடப்பட உள்ளன.

பிரான்ஸில் ஆண்டுதோறும் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்கள் உற்றுநோக்கும் ஒரு விழாவாகும். இந்த விழாவில் கலந்துகொள்வதையும், அதில் தங்களது படங்கள் திரையிடப்படுவதையும் மிகப்பெரிய கவுரவமாக சினிமா நட்சத்திரங்கள் கருதி வருகின்றனர்.
அந்த வகையில், 75-வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. வருகிற மே 28-ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் ஏராளமான படங்கள் திரையிடப்பட உள்ளன. குறிப்பாக மாதவனின் ராக்கெட்ரி, பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன.
அதுமட்டுமின்றி இந்த விழாவில் இந்திய திரைத்துறையை சார்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கிராமிய இசைக்கலைஞரும், பாடகருமான மாமே கான், பாலிவுட் நடிகர்கள் நவாசுதீன் சித்திக். மாதவன், அக்ஷய் குமார் மற்றும் நடிகைகள் தமன்னா, பூஜா ஹெக்டே, நயன்தாரா உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இதில் நடிகை நயன்தாரா, கலந்துகொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. அவர் தற்போது திருமண வேலைகளில் பிசியாக இருப்பதனால் கேன்ஸ் பட விழாவில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... The Legend movie :கேன்ஸ் பட விழாவில் ‘லெஜண்ட்’ படக்குழு கொடுக்க உள்ள மாஸ் சர்ப்ரைஸ்- அதிரடி காட்டும் அண்ணாச்சி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.