- Home
- Cinema
- மெழுகு டாலு நீ... அழகு ஸ்கூலு நீ..! சேலையில் மயக்கும் மாளவிகா மோகனனின் பியூட்டிஃபுல் கிளிக்ஸ்
மெழுகு டாலு நீ... அழகு ஸ்கூலு நீ..! சேலையில் மயக்கும் மாளவிகா மோகனனின் பியூட்டிஃபுல் கிளிக்ஸ்
நடிகை மாளவிகா மோகனன், சேலையில் அழகு சிலை போன் போஸ் கொடுத்த புகைப்படங்களின் தொகுப்பை இந்த கேலரியில் பார்க்கலாம்.

Malavika Mohanan Saree Photos
கேரளத்து பியூட்டியான மாளவிகா மோகனன், தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே ரஜினியுடன் நடித்ததால் இவருக்கு அடுத்த படத்தில் தளபதி விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.
மாளவிகாவுக்கு அடித்த ஜாக்பாட்
விஜய்க்கு ஜோடியாக நடித்த பின்னர் மாளவிகா மோகனனுக்கு பான் இந்தியா அளவில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. குறிப்பாக இந்தியில் பிசியானார். அதுமட்டுமின்றி மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு தமிழ் படங்கள் தான் கைகொடுத்தது. இதனால் கோலிவுட்டில் கவனம் செலுத்த தொடங்கினார்.
தங்கலான் மாளவிகா
மாளவிகா மோகனனுக்குள் இருக்கும் நடிப்பு ராட்சசியை வெளிக்கொண்டு வந்த படம் என்றால் அது தங்கலான் தான். பா.இரஞ்சித் இயக்கிய அப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார் மாளவிகா. அவரின் கதாபாத்திரத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
பான் இந்தியா மோகம்
நடிகை மாளவிகா மோகனனுக்கு பான் இந்தியா படங்களில் நடிக்க ஆசை இருந்தது. அதை நிறைவு செய்யும் படமாக ராஜாசாப் இருந்துள்ளது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார் மாளவிகா. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.
இன்ஸ்டா பிரபலம்
சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனன், அதில் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருக்கு இன்ஸ்டாவில் 40 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர்.
சேலையில் ஜொலித்த மாளவிகா
நடிகை மாளவிகா மோகனன் சேலையில் போட்டோஷூட் நடத்தினால் அதற்கென தனி மவுசு உண்டு. அதில் மெழுகு டால் போன் ஜொலிப்பார் மாளவிகா. அவர் சேலையில் செம அழகாக போஸ் கொடுத்தபடி எடுத்த போட்டோஷூட்டின் தொகுப்பு தான் இது.