தளபதி விஜய்யால் கலாநிதி மாறனுக்கு செம வருமானம்..! இந்த மேட்டர படிங்க மொதல்ல..!
கலாநிதி மாறன் மிகப்பெரிய ரஜினி ரசிகராக இருந்தாலும் அவரது சன் டிவி மூலம் நல்ல வருமானத்தை ஈட்டித் தருவது தளபதி விஜய் தானாம்.

Highest TRP Rating Films on Sun TV
சன் டிவி சின்னத்திரை சீரியல்களுக்கு மட்டுமல்ல அதில் ஒளிபரப்பாகும் படங்களுக்கும் பேமஸ் தான். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சீரியல்களுக்கு ரெஸ்ட் விட்டு பிற நிகழ்ச்சிகள் மற்றும் புதுப் படங்களை ஒளிபரப்பி வந்த சன் டிவி, தற்போது சீரியல்களுக்கு ஏற்பட்ட டிமாண்ட் காரணமாக வாரத்தின் 6 நாட்கள் சீரியல்களை ஒளிபரப்பிவிட்டு, ஞாயிற்றுக் கிழமை மட்டும் மாலையில் திரைப்படங்களை ஒளிபரப்பி வருகிறது. அப்படி இந்த ஆண்டு சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான திரைப்படங்களில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 6 படங்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
அதிக டிஆர்பி பெற்ற படங்கள்
அதன்படி 6-வது இடத்தில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்த இப்படம் சன் டிவியில் ஒளிபரப்பான போது அதற்கு 9.14 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தில் நடிகர் விஜய்யின் ஜில்லா மற்றும் லியோ ஆகிய திரைப்படங்கள் உள்ளன. அதன்படி விஜய்யின் இந்த இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களும் 9.40 டிஆர்பி புள்ளிகளை பெற்றிருக்கிறது. இந்த பட்டியலில் நான்காவது இடத்தை ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த பூஜை திரைப்படம் பிடித்துள்ளது. இப்படத்திற்கு 9.85 டிஆர்பி கிடைத்துள்ளது.
டாப் 3ல் இரண்டு விஜய் படங்கள்
முதல் மூன்று இடங்களில் இரண்டு இடங்களை விஜய் படங்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. எஞ்சியுள்ள ஒரு இடம் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்துக்கு கிடைத்துள்ளது. அப்படம் 10.24 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் விஜய்யின் கில்லி படம் உள்ளது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத இப்படம் 10.05 டிஆர்பி ரேட்டிங் பெற்றிருக்கிறது. இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பதும் விஜய் படம். பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த எவர்கிரீன் ஹிட் படமான திருப்பாச்சி தான் இந்த லிஸ்ட்டில் முதலிடம் பிடித்துள்ளது. அப்படத்திற்கு 11.75 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது.
லிஸ்ட்டில் ஒரு ரஜினி படம் கூட இல்லை
இந்த ஆண்டைப் பொறுத்தவரை சன் டிவிக்கு அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுக் கொடுத்திருப்பது விஜய் படங்கள் தான் என்பதை இந்த பட்டியல் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதில் மற்றொரு அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், இந்தப் பட்டியலில் சன் டிவி நிறுவனர் கலாநிதி மாறனின் பேவரைட் ஹீரோவான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஒரு படம் கூட இடம்பெறவில்லை. சன் டிவியின் கஜானாவை நிரப்பும் ஹீரோவாக விஜய் தான் இருந்து வருகிறார் என்பது இந்த பட்டியல் மூலம் தெரியவருகிறது. விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமமும் சன் டிவியிடம் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.