- Home
- Cinema
- இந்த முறையும் எஸ்கேப் ஆன அபிநய்... பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் தெரியுமா?
இந்த முறையும் எஸ்கேப் ஆன அபிநய்... பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ள இந்நிகழ்ச்சி தற்போது புதிய புதுப்பொலிவுடன் ஓடிடி-க்காக நடத்தப்படுகிறது. தமிழில் முதன்முறையாக இவ்வாறு நடத்தப்படுவதால், இதனை பிரபலப்படுத்தும் விதமாக இதற்கு முன் நடந்து முடிந்த சீசன்களில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்கள் 14 பேரை தேர்ந்தெடுத்து களமிறக்கி உள்ளனர்.
அதன்படி முதல் சீசனில் இருந்து சினேகன், ஜூலி, சுஜா வருணியும், இரண்டாவது சீசனில் இருந்து ஷாரிக்கும், தாடி பாலாஜியும், மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி, வனிதாவும், நான்காவது சீசனில் இருந்து அனிதா, பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தியும், 5-வது சீசனில் இருந்து நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அந்த வகையில் கடந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் சுஜா வருணி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாரம் அபிநய் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுஜா வருணி வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.