MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • ITI Courses: மாணவர்களுக்கு குட் நியூஸ்! இது எல்லாமே இலவசம்! அதுமட்டுமல்ல உதவித்தொகையும் இருக்கு!

ITI Courses: மாணவர்களுக்கு குட் நியூஸ்! இது எல்லாமே இலவசம்! அதுமட்டுமல்ல உதவித்தொகையும் இருக்கு!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர்ந்து 100% வேலைவாய்ப்பு, மாத உதவித்தொகை, இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் பிற சலுகைகளைப் பெறுங்கள்.

2 Min read
vinoth kumar
Published : Oct 23 2024, 10:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழகத்தில் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ மூலம் ஆண்டுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பு முடித்து வெளியே வருகிறார்கள். இவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் மூலமாக வேலைக்கு ஏற்பாடு செய்ய  வேலை வாய்ப்பு முகாமையும் நடத்தி வருகிறது. 

27

இந்நிலையில், 10-வது தேர்ச்சி மற்றும் +2. டிப்ளமோ மற்றும் அதற்கு மேல் கலை அறிவியல், பொறியியல் படித்தவர்களும் வேலைவாய்ப்பினை உடனடியாக தொழிற் நிறுவனங்களிலும், மத்திய மாநில அரசு நிறுவனங்களிலும் பெறும் வகையில் இப்பயிற்சியில் சேர அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வருகை தந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

37

இரண்டு ஆண்டு தொழிற்பிரிவுகள்

சிவில் என்ஜினியரிங் அசிஸ்டன்ட், டிராப்ட்ஸ்மேன் சிவில் டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கல், டர்னர், மெஷினிஸ்ட், லிப்ட் மெக்கானிக் பிட்டர். ஏசி மெக்கானிக்

கல்வித்தகுதி

10வது, 12வது டிப்ளமோ படிப்பு அல்லது கலை அறிவியல் பிரிவில் டிகிரி பட்டம்

ஓராண்டு தொழிற்பிரிவுகள் 

இன்டீரியர்டிசைன் அண்ட் டெக்கரேஷன். டிரோன் பைலட் (ஆறு மாத தொழிற்பிரிவு)

கல்வித்தகுதி

10வது, 12வது டிப்ளமோ படிப்பு அல்லது கலை அறிவியல் பிரிவில் டிகிரி பட்டம்

47

மேலும் தமிழ்நாடு அரசு TATA டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் உயர் தொழில் நுட்பத்துடன் (Industry 4.0 Technology Centre) கூடிய ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுகளில் தற்போது சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தொழில்நுட்ப மையம் (தொழில் 4.0)

ஓராண்டு தொழிற்பிரிவுகள்

Industrial Robotics & Digital Manufacturing Technician

கல்வித்தகுதி

10வது, 12வது டிப்ளமோ படிப்பு அல்லது கலை அறிவியல் பிரிவில் டிகிரி பட்டம்

இரண்டு ஆண்டு தொழிற்பிரிவுகள் 

Mechanic Electric Vehicle, Basic Designer & Virtual Verifier (Mechanical Advanced CNC Machining Technician

கல்வித்தகுதி

10வது, 12வது டிப்ளமோ படிப்பு அல்லது கலை அறிவியல் பிரிவில் டிகிரி பட்டம்

57
Indian Currency

Indian Currency

மேற்காணும் பயிற்சிகள் முடிந்தவுடன் வளாக நேர்காணல் நடத்தி தொழில்நிறுவனங்களில் 100% வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.  மாதம் ரூ.750/- உதவித்தொகை, விலையில்லா NIMI பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவி, 2 செட் சீருடைகள் (தையல் கட்டணத்துடன்.) பஸ் பாஸ், ஷூ ஆகியவை தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.

67

மேலும் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு ஆண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்படி மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும். இதே போல பெண் பயிற்சியாளருக்கு புதுமைப் பெண் திட்டத்தின் படி மாதம் ரூபாய் 1000/- அரசால் வழங்கப்படும். பயிற்சியில் சேருபவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது. பயிற்சி நிலைய வளாகத்தில் தங்கி பயில விடுதி வசதி உண்டு.

77

நேரடி சேர்க்கைக்கு துணை இயக்குநர் / முதல்வர். அரசினர் ஐடிஐ, வடசென்னை (மிண்ட்). முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம். என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இப்படிப்பில் சேர்வதற்கு பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி அக்டோபர் 30ம். கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி எண். 9894192652, 9499055689 அறிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved