- Home
- Career
- சுய தொழில் தொடங்க ரூ.20 இலட்சம்: அரசு அதிரடி அறிவிப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்! தகுதி என்ன?
சுய தொழில் தொடங்க ரூ.20 இலட்சம்: அரசு அதிரடி அறிவிப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்! தகுதி என்ன?
நகர்ப்புற ஏழை மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க ரூ.20 இலட்சம் வங்கிக்கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சுயதொழில் தொடங்க வங்கிக்கடன் பெற அரிய வாய்ப்பு!
திருநெல்வேலி மாவட்டம், நகர்ப்புற ஏழை மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சுயதொழில் தொடங்க வங்கிக்கடன் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 2025-26 ஆம் ஆண்டில் தனிநபர் மற்றும் குழுக்களுக்கு வங்கி தொழிற்கடன் வழங்கப்படவுள்ளது. இதற்காக, மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக் கொண்ட மாவட்ட அளவிலான தேர்வுக் குழு (Task Force Committee) அமைக்கப்பட்டுள்ளது.
தனிநபர் மற்றும் குழுக்களுக்கான கடன் திட்டங்கள்!
சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், தனிநபர் தொழில் கடன் (SEP-I) பெற 18 வயதுக்கு மேற்பட்ட நகர்ப்புற ஏழைகளுக்கு ரூ.4.00 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும். குழு தொழில் கடன் (SEP-G) பெற, 18 வயதுக்கு மேற்பட்ட நகர்ப்புற ஏழைகளில் 2 முதல் 5 நபர்கள் கொண்ட தொழில் குழுக்களுக்கு ரூ.20.00 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த திட்டங்கள் மூலம் சுயதொழில் தொடங்குவோருக்கு மிகப்பெரிய ஊக்கம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
விண்ணப்பிப்பது எப்படி? வழிமுறைகள் இதோ!
தகுதியுள்ள நகர்ப்புற ஏழை/சுய உதவிக்குழு உறுப்பினர்கள்/குழுக்கள், தனிநபர் கடன்/குழுக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் . இதற்கான விண்ணப்பப் படிவத்தை [https://tirunelveli.nic.in] என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
சுய தொழில் தொடங்க ரூ.20 இலட்சம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், கொக்கிரகுளம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது . இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி சுயதொழில் தொடங்கி வாழ்வில் முன்னேறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.