பலர் 30 வயதுக்கு மேல் தொழில் முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். ஆனால் எந்த வயதிலும் தொழிலை மாற்றலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
தற்போதைய தொழிலை ஏன் விட விரும்புகிறீர்கள் என்பதை அடையாளம் காண வேண்டும். திருப்தியின்மையா அல்லது மாற்றமா? முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் திறமைகள், ஆர்வங்களை மதிப்பிட நேரம் ஒதுக்குங்கள். உங்களை ஊக்குவிப்பவை, உங்கள் இலக்குகளுக்குப் பொருந்துபவை எவை என்பதைக் கண்டறியவும்.
திறன்கள், தகுதிகள், வேலைவாய்ப்பு சந்தை போக்குகளைப் புரிந்துகொள்ளுங்கள். தொழில் மாற்றம் நல்ல வாய்ப்புகளுக்கு வழிவகுக்குமா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
புதிய தொழிலுக்கான படிப்புகள், பயிலரங்குகள் அல்லது சான்றிதழ்களைப் பெறுங்கள்.
தேர்ந்தெடுத்த துறையில் உள்ள நிபுணர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். தொழில் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுங்கள், ஆன்லைன் சமூகங்களில் சேருங்கள், ஆலோசனை பெறுங்கள்.
புதிய துறையில் பகுதிநேர வேலை, ஃப்ரீலான்ஸ் வேலை அல்லது பயிற்சியுடன் தொடங்குங்கள். இது அனுபவத்தைத் தரும்.
தொழில் மாற்றத்தில் சம்பளம் குறையலாம் அல்லது படிப்பு தேவைப்படலாம். எதிர்கால செலவுகளுக்கு பணத்தை சேமிக்கவும்.
30 வயதில் தொழில் மாற்றம் செய்ய நேரம் ஆகலாம், எனவே பொறுமையாக இருங்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறுங்கள். ஒரே நாளில் அதிசயம் நடக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.