MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • இனி காலேஜ் வைஃபை 'ஜெட்' வேகத்தில் இருக்கும்! மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.

இனி காலேஜ் வைஃபை 'ஜெட்' வேகத்தில் இருக்கும்! மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.

UGC பல்கலைக்கழகங்களில் இணைய வசதியை மேம்படுத்த TRAI-யின் டிஜிட்டல் ரேட்டிங் முறையை பின்பற்றுமாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் 5ஜி மற்றும் வேகமான இணையம் உறுதி செய்யப்படும்.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Feb 01 2026, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
UGC
Image Credit : Gemini

UGC

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அறிமுகப்படுத்திய புதிய "டிஜிட்டல் கனெக்டிவிட்டி ரேட்டிங்" (Digital Connectivity Rating) முறையைப் பற்றி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் யுஜிசி தகவல் அனுப்பியுள்ளது. இது மாணவர்களுக்குக் கல்லூரி வளாகத்தில் தடையற்ற இணைய வசதியை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரேட்டிங் முறை என்றால் என்ன?
Image Credit : X

ரேட்டிங் முறை என்றால் என்ன?

டிராய் (TRAI) அறிமுகப்படுத்தியுள்ள இந்தத் திட்டத்தின்படி, கட்டிடங்கள் மற்றும் வளாகங்கள் அவற்றின் இணைய இணைப்புத் தரத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படும். அக்டோபர் 2024 முதல் அமலுக்கு வந்த இந்த விதிமுறையின் கீழ், 'டிஜிட்டல் கனெக்டிவிட்டி ரேட்டிங் ஏஜென்சிகள்' (DCRAs) மூலம் கல்வி நிறுவனங்களின் கட்டிடங்கள் ஆய்வு செய்யப்படும். அந்த வளாகத்தில் இணைய வேகம் எப்படி உள்ளது, 5ஜி வசதி உள்ளதா, மற்றும் நெட்வொர்க் கவரேஜ் சிறப்பாக உள்ளதா என்பதைப் பொறுத்து அந்த இடத்திற்கு 'ஸ்டார் ரேட்டிங்' வழங்கப்படும்.

35
டிஜிட்டல் கல்விக்கு ஏன் இது அவசியம்?
Image Credit : X

டிஜிட்டல் கல்விக்கு ஏன் இது அவசியம்?

இன்றைய நவீன உலகில் கல்வி என்பது வகுப்பறையோடு முடிந்துவிடுவதில்லை. ஆன்லைன் வகுப்புகள், டிஜிட்டல் நூலகங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு வேகமான இணையம் மிக அவசியம். எனவே, கல்லூரிகளில் சிறந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. இந்த ரேட்டிங் முறையை அமல்படுத்துவதன் மூலம், கல்லூரிகள் தங்களை "டிஜிட்டல் ரெடி" (Digitally Ready) வளாகங்களாக மாற்றிக்கொள்ள முடியும் என்று டிராய் கூறியுள்ளது.

45
மாணவர்களுக்கு என்ன பயன்?
Image Credit : X

மாணவர்களுக்கு என்ன பயன்?

கல்லூரிகள் இந்த ரேட்டிங் முறையைப் பின்பற்றுவதன் மூலம், எந்தக் கல்லூரியில் சிறந்த இணைய வசதி உள்ளது என்பதை மாணவர்களும் பெற்றோர்களும் எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். இது கல்லூரிகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டிய உருவாக்கி, உள்கட்டமைப்பை மேம்படுத்த வழிவகுக்கும். யுஜிசி தனது சுற்றறிக்கையில், அங்கீகாரம் (Accreditation) மற்றும் தர மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ரேட்டிங் முறையைப் பயன்படுத்துமாறு பல்கலைக்கழகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

55
அடுத்த கட்டம் என்ன?
Image Credit : StoryBlocks

அடுத்த கட்டம் என்ன?

விருப்பமுள்ள பல்கலைக்கழகங்கள் டிராய் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகளைத் தொடர்பு கொண்டு தங்கள் வளாகத்தை மதிப்பீடு செய்யலாம். இதன் மூலம் எதிர்காலத்தில் அனைத்துக் கல்லூரி வளாகங்களிலும் அதிவேக இணைய வசதி கிடைப்பது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(37.4 ov)177/9
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPSC Group 4: அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! 6,574 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.!
Recommended image2
8th Pay Commission Pension Hike:8-வது ஊதியக் குழு அப்டேட்! ரியல் ஜாக்பாட்.! ஒன்றரை லட்சம் ரூபாய் பென்ஷன் கிடைக்குமா?
Recommended image3
12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.63,200 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிங்க!
Related Stories
Recommended image1
தயாரா இருங்க! எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் UGC NET ரிசல்ட்!
Recommended image2
இடஒதுக்கீட்டில் இனி 'தில்லுமுல்லு' நடக்காது! UGC-யின் 2026 கிடுக்கிப்பிடி உத்தரவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved