- Home
- Career
- Job Alert: மத்திய அரசு வேலை தேடுவோருக்கு ஜாக்பாட்.! நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அணுசக்தி துறையில் பணியாற்ற வாய்ப்பு.!
Job Alert: மத்திய அரசு வேலை தேடுவோருக்கு ஜாக்பாட்.! நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அணுசக்தி துறையில் பணியாற்ற வாய்ப்பு.!
மத்திய அரசின் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (UCIL) 2025-ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மைனிங், வெல்டிங் உள்ளிட்ட துறைகளில் மொத்தம் 107 காலிப்பணியிடங்களுக்கு டிசம்பர் 1 முதல் 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இளைஞர்களை அழைக்கிறது யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) நிறுவனத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளில் பணியிடங்களை நிரப்பும் நோக்கில் 2025 –க்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மைனிங், வெல்டிங், பாயிலர்-கம்-கம்பரஸ்சர் போன்ற துறைகளில் மொத்தம் 107 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு டிசம்பர் 1 முதல் 31 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரம்
- மைனிங் மேட் – C : 95
- வெல்டிங் இன்ஜின் டிரைவர் – B : 9
- பாயிலர்-கம்-கம்பரஸ்சர் : 3
சம்பள விவரம்
மைனிங் மேட் பதவிக்கு ரூ.29,190 – 45,480 வரை மற்றும் மற்ற இரண்டு பதவிகளுக்கு ரூ.28,390 – 44,230 வரை சம்பளம் வழங்கப்படும்.
தகுதி & வயது வரம்பு
மைனிங் மேட் – “Mining Mate / Foreman” சான்றிதழ் + குறைந்தபட்சம் 3 ஆண்டு அனுபவம். வயது 40 வரை; அனுபவம் உள்ளவர்களுக்கு தளர்வு 53 வரை.
வெல்டிங் இன்ஜின் டிரைவர் – 10ஆம் வகுப்பு + உரிய உரிமம் + 3 ஆண்டு அனுபவம். வயது வரம்பு 32.
பாயிலர்-கம்-கம்பரஸ்சர் – 10ஆம் வகுப்பு + தொடர்புடைய சான்றிதழ் + 1 ஆண்டு அனுபவம். வயது 30 வரை.
தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைப் பொருத்து எழுத்துத் தேர்வு / திறன் தேர்வு / சைக்கோமெட்ரிக் தேர்வு / குழு கலந்துரையாடல் / நேர்காணல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று நடைபெறலாம்.
விண்ணப்பப் பதிவு
விண்ணப்பதாரர்கள் https://ucil.gov.in தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். ஆனால் SC, ST, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. தேர்வு முடிவில் தேர்வானவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும். 10ஆம் வகுப்பு, தொழிற்பிரிவு சான்றிதழ், அனுபவச் சான்றிதழ் மற்றும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் தொடங்கும் நாள் : 01.12.2025 காலை 10 மணி
- கடைசி தேதி : 31.12.2025
- தேர்வு/நேர்காணல் : பின்னர் அறிவிக்கப்படும்
ஆர்வமுள்ளவர்கள் முழு அறிவிப்பையும் வாசித்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

