MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • TNSET Result : ஜூன் 26-ல் செட் தேர்வு முடிவுகள் வெளியீடா? உண்மை என்ன?

TNSET Result : ஜூன் 26-ல் செட் தேர்வு முடிவுகள் வெளியீடா? உண்மை என்ன?

TNSET 2025 தேர்வு முடிவுகள் தாமதமாவதால் தேர்வர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.ஜூன் 26-ல் செட் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா? என்பது குறித்து இந்த செய்தியில் காண்போம்.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Jun 07 2025, 12:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு: ஒரு முன்னோட்டம்
Image Credit : stockphoto

தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு: ஒரு முன்னோட்டம்

தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்ந்தெடுக்கும் தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு (TNSET) 2025 முடிவுகளுக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் 6 முதல் 9 ஆம் தேதி வரை இந்தத் தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு, உயர்கல்வியில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மன உளைச்சலில் தேர்வர்கள்: தாமதத்தின் விளைவு
Image Credit : our own

மன உளைச்சலில் தேர்வர்கள்: தாமதத்தின் விளைவு

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, டிஎன்செட் 2025 தேர்வு முடிவுகள்,ஏப்ரல் மாதத்திலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் மாதம் பிறந்துவிட்ட நிலையிலும் முடிவுகள் வெளியாகாததால் தேர்வர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள  கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களைப் பெற இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் முக்கியம் என்பதால், இந்தத் தாமதம் தேர்வர்களின் எதிர்கால திட்டங்களை பாதிக்கிறது.

36
"செட் தேர்வே வேண்டாம்": சமூக ஊடகங்களில் கருத்துகள்
Image Credit : Google

"செட் தேர்வே வேண்டாம்": சமூக ஊடகங்களில் கருத்துகள்

தாமதத்தால் அதிருப்தியடைந்த பலர், "நாங்கள் நீண்ட நாட்களாக இந்தத் தேர்வு முடிவுக்காக காத்திருந்து சோர்வடைந்துவிட்டோம். செட் தேர்வு முடிவுகளை நம்பியிருப்பதை விட, யுஜிசி நடத்தக்கூடிய நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்" என்று தங்களது கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தேர்வர்களின் பொறுமையின்மையையும் விரக்தியையும் காட்டுகிறது.

46
மெயில் மேல் மெயில் அனுப்பும் தேர்வர்கள்!
Image Credit : freepik

மெயில் மேல் மெயில் அனுப்பும் தேர்வர்கள்!

தேர்வு முடிவுகள் தாமதமாவதால் விரக்தியடைந்த தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

56
டி.ஆர்.பி. மற்றும் செட்: தொடரும் தாமதம்
Image Credit : Getty

டி.ஆர்.பி. மற்றும் செட்: தொடரும் தாமதம்

மேலும் சிலரோ, "நாங்கள் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 2019-ல் இருந்தே விண்ணப்பித்துக் காத்திருக்கிறோம். அதற்கான முறையான பணிகள் எதுவும் நடக்கவில்லை. அதே போல செட் தேர்வு முடிவுகளும் வெளியாவதில் ரொம்ப தாமதம் ஏற்பட்டுள்ளது மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது" என்றனர். இது, தேர்வர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான காத்திருப்பு மற்றும் நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.

66
TNSET : ஜூன் 26-ல் செட் தேர்வு முடிவுகள் வெளியீடா? உண்மை என்ன?
Image Credit : freepik

TNSET : ஜூன் 26-ல் செட் தேர்வு முடிவுகள் வெளியீடா? உண்மை என்ன?

இந்தநிலையில், ஜூன் 26-ல்செட் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா? என்பது குறித்து டி.ஆர்.பி. உதவி எண்ணை தொடர்பு கொண்டபோது, அவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை. இதனையடுத்து சில பெயர் வெளியிடவிரும்பாத அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, "ஜூன் 26-ல் செட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படலாம். தற்போது தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது" என்றார். எனவே, தேர்வர்கள் வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருப்பது நல்லது.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
தேர்வு
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission Pension Calculator: 8-வது ஊதியக் குழுவில் பென்ஷன் டபுள் ஆகுமா? 25, 50, 75 ஆயிரம் வாங்குபவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
Recommended image2
DA 63% ஆனதால் HRA உயருமா? மாதச் சம்பளத்தில் எவ்வளவு மாற்றம் வரும்?
Recommended image3
TNPSC: அரசுப் போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்! இனி 5 வயது அதிகமானாலும் தேர்வு எழுதலாம்!
Related Stories
Recommended image1
TNSET 2024: ஆன்சர் கீ வெளியீடு: டவுன்லோடு செய்வது எப்படி ? விடைத்தாளில் சந்தேகம் இருக்கா?
Recommended image2
TNSET Result 2025: டிஎன்செட் தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? டி.ஆர்.பி-யிடம் கேள்வி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved