MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ!

அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ!

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு எப்படி விண்ணபிப்பது? என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 04 2026, 07:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
Image Credit : Asianet News

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

அரசு கலை மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிவிப்பில், 'தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க 2025-26ஆம் கல்வியாண்டிற்கு பாடப்பிரிவுகளில் 15,000க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும், புதிய பாடப்பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டன.

தமிழக அரசின் அறிவிப்பு

மேலும், ஏழை எளிய மாணாக்கர்களின் உயர்கல்வித் தேவையினை பூர்த்தி செய்ய 37 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. 

கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த இயலாத நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க மாணாக்கர்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க முதற்கட்டமாக 574 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தவும் பின்னர், 823 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தவும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, தற்காலிகமாக 1,277 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

22
426 விரிவுரையாளர் பணியிடங்கள்
Image Credit : Asianet News

426 விரிவுரையாளர் பணியிடங்கள்

இதன் தொடர்ச்சியாக மேலும், தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடப்பிரிவுகளுக்கு 306 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு ஆணையிடப்பட்டது. இத்துடன் ஏற்கனவே வெளியிடப்பட்ட பணியிடங்கள் சேர்க்கை பெறாத 120 பணியிடங்களும் சேர்த்து ஆகமொத்தம் 426 தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் 29 பாடப்பிரிவுகளுக்கு நிரப்பப்படவுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் https://www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையில் தேர்வு

மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் வாயிலாக இன்று (04.02.2026) முதல் 09.02.2026 வரை தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றியும், கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவு செய்யப்படுவர்' என்று கூறப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

தமிழக அரசு அறிவித்துள்ள தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தமிழக கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் tngasa.in அல்லது dce.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக சென்று விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றை சரியாக பதிவிட வேண்டும். புகைப்படம், கையொப்பம் மற்றும் கல்விச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டியது இருக்கும். இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Related Articles

Related image1
அரசு வேலை வேண்டுமா? தேர்வு கிடையாது! 10-ம் வகுப்பு மார்க் போதும்! அஞ்சல் துறையில் 28,740 பணியிடங்கள்
Related image2
SBI: எஸ்பிஐ வங்கியில் 2,273 பணியிடங்கள்.. ரூ.52,000 சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.50,000 சம்பளத்தில் உள்ளூரிலேயே அரசு வேலை - 8-ம் வகுப்பு படித்தவர்கள் முந்துங்கள்!
Recommended image2
கேம்பஸ் பாதுகாப்பு: ஐஐடி முதல் பல்கலைக்கழகம் வரை... எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு உள்ள வசதிகள் என்ன?
Recommended image3
தேர்வு பயம் வேண்டாம்! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு ஹால் டிக்கெட் வெளியானது - டவுன்லோட் செய்வது எப்படி?
Related Stories
Recommended image1
அரசு வேலை வேண்டுமா? தேர்வு கிடையாது! 10-ம் வகுப்பு மார்க் போதும்! அஞ்சல் துறையில் 28,740 பணியிடங்கள்
Recommended image2
SBI: எஸ்பிஐ வங்கியில் 2,273 பணியிடங்கள்.. ரூ.52,000 சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved