- Home
- Career
- Assistant Professor Recruitment: TRB-இன் திடீர் ஷாக்! அரசாணையில் வந்த புது டிவிஸ்ட்! எழுத்துத் தேர்வு + நேர்காணல்
Assistant Professor Recruitment: TRB-இன் திடீர் ஷாக்! அரசாணையில் வந்த புது டிவிஸ்ட்! எழுத்துத் தேர்வு + நேர்காணல்
Assistant Professor Recruitment தமிழ்: தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்! 4000 பணியிட அரசாணை ரத்து. எழுத்துத் தேர்வு, நேர்காணல், தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம். தேர்வுத் தேதி விரைவில் அறிவிப்பு!

Assistant Professor Recruitment பணியிட அறிவிப்பில் ஏற்பட்ட மாற்றம் என்ன?
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், உயர் கல்வித் துறை செயலாளர் சங்கர் தற்போது வெளியிட்டுள்ள புதிய அரசாணையில், அந்த 4,000 பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதிய நியமன முறை என்ன? எழுத்துத் தேர்வு கட்டாயம்!
இந்த 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களும் நிரந்தரமாக நிரப்பப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்திருந்தார். நியமன முறையைப் பொறுத்தவரை, எழுத்துத் தேர்வு (Written Exam) மற்றும் நேர்காணல் (Interview) ஆகியவற்றின் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதன் மூலம் ஆசிரியர் தேர்வு முறை மேலும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு முறை எப்படி இருக்கும்? தமிழ் மொழித் தாள் அவசியம்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 என இரண்டு பிரிவுகளில் நடைபெறும். தாள் 1 தேர்வில், பகுதி 1-ல் தமிழ் மொழித் தகுதித் தேர்வு இடம்பெறும். இதில், 30 கேள்விகளுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40% மதிப்பெண் கட்டாயம் எடுக்க வேண்டும். பகுதி 2-ல், 100 கேள்விகளுக்கு 150 மதிப்பெண்கள் ஒதுக்கப்படும். தாள் 2 தேர்வில் 50 மதிப்பெண்களுக்கு விளக்கமாக எழுதும் (Descriptive) கேள்விகள் இடம்பெறும்.
நேர்காணல் மற்றும் அனுபவத்திற்கான மதிப்பெண்கள்
எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து நேர்காணல் நடத்தப்படும். இதில், கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றிய அனுபவத்திற்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். நேர்காணலுக்கு 15 மதிப்பெண்கள் தனியாக ஒதுக்கப்படும். ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வரும்?
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் அளித்த தகவலின்படி, தற்போது பணியிடங்கள் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதலில் நியமனத்திற்கான இடஒதுக்கீடு (Reservation) பெறப்பட வேண்டும். இடஒதுக்கீடு பெற்ற பின்னரே, எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, விண்ணப்ப தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. CS தேர்வு கனவில் இருப்போர் தயாராகுங்கள்!