- Home
- Career
- TMB வங்கியில் கெத்தான வேலை! பட்டதாரிகளுக்கு செம சான்ஸ்.. இன்னும் கொஞ்ச நாள்தான் டைம் இருக்கு!
TMB வங்கியில் கெத்தான வேலை! பட்டதாரிகளுக்கு செம சான்ஸ்.. இன்னும் கொஞ்ச நாள்தான் டைம் இருக்கு!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB) இந்தியா முழுவதும் உள்ள கிளைகளுக்கு 20 கிளை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜனவரி 31, 2026-க்குள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB) இந்தியா முழுவதும் உள்ள அதன் பல்வேறு கிளைகளில் பணியாற்றுவதற்கு 20 கிளை மேலாளர் (Branch Head) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள்
இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இந்தப் பணியிடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன:
• கர்நாடகா (5): பெங்களூரு (4), ஹூப்ளி (1)
• கேரளா (4): எர்ணாகுளம், கோழிக்கோடு, திருவனந்தபுரம், திருவல்லா
• மகாராஷ்டிரா (3): மும்பை (2), புனே (1)
• தெலுங்கானா (2): ஹைதராபாத்
• டெல்லி (1), கொல்கத்தா (1), ஜெய்ப்பூர் (1), அகமதாபாத் (2), விசாகப்பட்டினம் (1).
தகுதி வரம்புகள்
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு (31-12-2025 அன்று): குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
1. மேலாளர் (Manager): வங்கியில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் (அசிஸ்டென்ட் மேலாளர் அல்லது அதற்கு மேல்).
2. சீனியர் மேலாளர் (Senior Manager): 8 ஆண்டுகள் அனுபவம் (அதில் 4 ஆண்டுகள் மேலாளர் பொறுப்பில் இருக்க வேண்டும்).
3. ஏவிபி (AVP): 10 ஆண்டுகள் அனுபவம் (அதில் 6 ஆண்டுகள் மேலாளர் பொறுப்பிலும், 2 ஆண்டுகள் சீனியர் மேலாளர் பொறுப்பிலும் இருந்திருக்க வேண்டும்).
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் மட்டும் தனியாகப் பிரிக்கப்பட்டு (Shortlisted), அவர்களுக்கு நேர்முகத் தேர்வு (Personal Interview) நடத்தப்படும். இது நேரடியாகவோ அல்லது வீடியோ கால் மூலமாகவோ நடைபெறலாம்.
• விண்ணப்பதாரர்கள் சரியான ஈமெயில் ஐடி மற்றும் மொபைல் எண்களைக் கொண்டிருக்க வேண்டும்.
• புகைப்படம், கையெழுத்து மற்றும் அனுபவச் சான்றிதழ்களைச் சரியான அளவில் பதிவேற்ற வேண்டும்.
• இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம்.
• விண்ணப்பதாரர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளோ அல்லது ஆர்பிஐ (RBI) மூலம் ஒழுங்கு நடவடிக்கை குறிப்புகளோ இருக்கக்கூடாது.
முக்கிய விவரங்கள்
• விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 12 ஜனவரி 2026
• விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31 ஜனவரி 2026
• விண்ணப்பக் கட்டணம்: கிடையாது (இலவசம்)
• விண்ணப்பிக்கும் முறை: www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதளம் வழியாக மட்டும்.
மேலதிக தகவல்களுக்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள அறிவிப்பை முழுமையாகப் பார்க்கவும்.

