மத்திய அரசு நிறுவனத்தில் வேலை! 10வது படிச்சிருந்தாலே போதும்.. மிஸ் பண்ணிடாதீங்க!
வேலூரைத் தலைமையிடமாகக் கொண்ட மத்திய அரசு நிறுவனமான சிம்கோவில் (SIMCO) 52 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சிம்கோ நிறுவனத்தில் வேலை
வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மத்திய அரசு நிறுவனமான தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் (SIMCO) பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் வருகிற ஜனவரி 20, 2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பணியிட விவரங்கள்
இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 52 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Social Marketing Manager (12 இடங்கள்):
கல்வி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு (Degree).
அனுபவம்: 2 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.
சம்பளம்: ரூ. 7,200 – 28,200.
Credit Executive (20 இடங்கள்):
கல்வி: பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ (Diploma).
சம்பளம்: ரூ. 6,200 – 26,200.
Clerk (10 இடங்கள்):
கல்வி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது டிப்ளமோ.
சம்பளம்: ரூ. 5,200 – 20,200.
Office Assistant (10 இடங்கள்):
கல்வி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ (ITI).
சம்பளம்: ரூ. 5,200 – 20,200.
வயது வரம்பு
மேனேஜர் மற்றும் எக்ஸிக்யூடிவ்: 22 முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். (12.12.2025 நிலவரப்படி)
கிளர்க் மற்றும் உதவியாளர்: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். (12.12.2025 நிலவரப்படி)
அரசு விதிகளின்படி SC/SCA/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
1. முதலில் simcoagri.com இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுக்க வேண்டும்.
2. பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து, 'SIMCO, எண் 35, 1st மேற்கு கிராஸ் ரோடு, காந்தி நகர், வேலூர்-06' என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
3. விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ. 500, SC/ST பிரிவினருக்கு ரூ. 250.

