MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • SBI Scholarship: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தகுதி இருந்தால் ரூ.15 லட்சம் வரை உதவித்தொகை.. அப்ளை பண்ணுங்க

SBI Scholarship: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தகுதி இருந்தால் ரூ.15 லட்சம் வரை உதவித்தொகை.. அப்ளை பண்ணுங்க

SBI Scholarship: இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, பிரிவைப் பொறுத்து ரூ.15,000 முதல் ரூ.15 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படலாம். இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டுள்ளன என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Jul 24 2026, 08:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
SBI Scholarship
Image Credit : Asianet News

SBI Scholarship

பொருளாதார சிக்கலால் கல்வியை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படாமல் இருக்க, திறமையான மாணவர்களுக்கு உதவும் வகையில் எஸ்பிஐ அறக்கட்டளை தனது ஆஷா கல்வி உதவித்தொகை திட்டம் 2026-க்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான மாணவர்களுக்கு, அவர்கள் விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.15 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரி, தொழில்முறை படிப்புகள், மருத்துவம், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் மாணவர்களும் இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Apply Process
Image Credit : Getty

Apply Process

இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் சில அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். பொதுவாக, முந்தைய கல்வியாண்டில் குறைந்தது 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தற்போது பயந்து வருவது அவசியம். ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குத் தனிப் பிரிவு உள்ளது. மேலும் பட்டப்படிப்பு, முதுகலை, மருத்துவம், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தனித்தனி பிரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Related image1
Mukesh Ambani House: அம்பானி வீட்ல வேலை வேணுமா? அரசு வேலையை விட கடினமாம்.! என்ன தகுதிகள் இருக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க.!
Related image2
அப்படியா! வேலை செய்வது போல் நடிக்கும் Gen Z ஊழியர்கள்?! அலுவலகங்களில் அதிகரிக்கும் புதிய டிரெண்ட்!
35
Student Eligibility
Image Credit : Gemini

Student Eligibility

குடும்ப ஆண்டு வருமானமும் தகுதி விதிகளில் முக்கிய இடம் பெறுகிறது. பள்ளி மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் பொதுவாக ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். கல்லூரி மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கு அவர்கள் விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து ஆண்டு வருமான வரம்பு ரூ.6 லட்சம் வரை அனுமதிக்கப்படலாம். இருப்பினும், ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி விதிமுறைகள் உள்ளன, விண்ணப்பிக்கும் முன் அவற்றை முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம்.

45
Last Date
Image Credit : Getty

Last Date

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் முதலில் தங்களின் தகுதியை சரிபார்த்து, தேவையான ஆவணங்களை தயாரித்து இணையம் வழியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். கல்விச் சான்றிதழ்கள், வருமானச் சான்று மற்றும் திட்டத்தில் கேட்கப்பட்டுள்ள பிற ஆவணங்களை சரியாக பதிவேற்ற வேண்டும். இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை 2026 செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி அல்லது விதிமுறைகளில் மாற்றம் ஏற்படக்கூடும் என்பதால், விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பார்த்து உறுதி செய்வது நல்லது.

55
Scholarship Deadline
Image Credit : Gemini

Scholarship Deadline

இந்தத் திட்டத்தில் குறிப்பிடப்படும் அதிகபட்ச ரூ.15 லட்சம் உதவித்தொகை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மாணவர் எந்தப் பிரிவில் விண்ணப்பிக்கிறார், தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறாரா, சமர்ப்பித்த ஆவணங்கள் சரியாக உள்ளனவா மற்றும் திட்ட விதிமுறைகள் என்ன என்பதன் அடிப்படையில் உதவித்தொகை தொகை நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாரத ஸ்டேட் வங்கி
உதவித்தொகை
தொழில்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Railway Job: இந்திய ரயில்வேயில் 4,098 காலிப்பணியிடங்கள்! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா? விண்ணப்பிப்பது எப்படி?
Recommended image2
Govt Scheme: ரூ. 15 லட்சம் கொடுக்கும் அரசு.! நீங்களும் முதலாளியாக நேரம் வந்தாச்சு.! உடனே அப்ளை பண்ணுங்க.!
Recommended image3
Business: வீட்டில் இருந்தே செய்யலாம் பிஸ்னஸ்.! மாதம் ரூ.50,000 சம்பாதிக்க நீங்க ரெடியா?!
Related Stories
Recommended image1
Mukesh Ambani House: அம்பானி வீட்ல வேலை வேணுமா? அரசு வேலையை விட கடினமாம்.! என்ன தகுதிகள் இருக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க.!
Recommended image2
அப்படியா! வேலை செய்வது போல் நடிக்கும் Gen Z ஊழியர்கள்?! அலுவலகங்களில் அதிகரிக்கும் புதிய டிரெண்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved