- Home
- Career
- Job Alert: இதை விட பெரிய வங்கி வேலை வாய்ப்பு கிடைக்காது! SBI-யில் லட்சங்களில் Salary! உடனே Apply பண்ணுங்க!
Job Alert: இதை விட பெரிய வங்கி வேலை வாய்ப்பு கிடைக்காது! SBI-யில் லட்சங்களில் Salary! உடனே Apply பண்ணுங்க!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) 996 ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி (SO) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. VP Wealth, AVP Wealth, மற்றும் CRE போன்ற பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SBI அழைக்கிறது வாருங்கள்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு, மொத்தம் 996 Specialist Cadre Officer (SO) பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அழைத்துள்ளது. இந்த வேலைகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன. 23.12.2025க்குள் SBI அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முக்கியமான காலிப்பணியிடங்கள்
இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ள முக்கியமான காலிப்பணியிடங்கள்:
- VP Wealth (SRM) – 506 பணியிடங்கள்
- AVP Wealth (RM) – 206 பணியிடங்கள்
- Customer Relationship Executive (CRE) – 284 பணியிடங்கள்
மொத்தம் – 996 காலிப்பணியிடங்கள்
தகுதி விவரம்
அனைத்து பணியிடங்களுக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு அவசியம். MBA (Banking/Finance/Marketing) போன்ற மேல்படிப்புகள் இருந்தால் கூடுதல் மதிப்பளிக்கப்படும். CFP, CFA, NISM போன்ற சான்றிதழ்கள் இருந்தால் தேர்வில் நல்ல முன்னுரிமை கிடைக்கும்.
அனுபவத் தேவைகள்
- VP Wealth (SRM): குறைந்தது 6 ஆண்டுகள் வங்கி/வெல்த் மேனேஜ்மென்ட் துறையில் அனுபவம்
- AVP Wealth (RM): 3 ஆண்டுகள் அனுபவம் (அல்லது SBI Wealth CRE-க்களுக்கு 4 ஆண்டுகள் அனுபவம்)
- CRE: ஆவணப்பணிகளில் அனுபவம் மற்றும் நல்ல தொடர்பு திறன் இருந்தால் போதும்
வயது வரம்பு (01.05.2025 )
- VP Wealth – 26 முதல் 42 வரை
- AVP Wealth – 23 முதல் 35 வரை
- CRE – 20 முதல் 35 வரை
- SC/ST, OBC, PwBD மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு அரசின் விதிப்படி வயது தளர்வு வழங்கப்படும்.
சம்பள விவரம்
- VP Wealth (SRM): ஆண்டு ரூ.44.70 லட்சம்
- AVP Wealth (RM): ஆண்டு ரூ.30.20 லட்சம்
- CRE: ஆண்டு ரூ.6.20 லட்சம்
உயர்ந்த சம்பள தொகை மற்றும் சிறந்த வளர்ச்சி வாய்ப்புகள் இருப்பதால் வங்கி துறையில் கரியரை தேடும் வேட்பாளர்களுக்கு இது சிறந்த வேலை வாய்ப்பு.
தேர்வு நடைமுறை
முதலில் Shortlisting
பின்னர் நேர்முகத் தேர்வு (நேரில்/டெலிபோன்/வீடியோ)
இறுதியில் CTC சம்பள பேச்சுவார்த்தை
விண்ணப்பக் கட்டணம்
SC / ST / PwBD – கட்டணம் இல்லை
பிற விண்ணப்பதாரர்கள் – ₹750 (ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்)
எப்படி விண்ணப்பிப்பது?
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://sbi.bank.in/ இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.12.2025
இந்த SBI ஆட்சேர்ப்பு 2025, வங்கி மற்றும் நிதி துறையில் உயர்ந்த நிலை பதவிகளை விரும்பும் அனைவருக்கும் மிகச் சிறந்த வாய்ப்பாகும். தவறாமல் விண்ணப்பிக்கவும்!

