MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • கை நிறைய சம்பளம்.! இன்டர்வியூ முடிந்தவுடன் சவூதியில் வேலை - முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு

கை நிறைய சம்பளம்.! இன்டர்வியூ முடிந்தவுடன் சவூதியில் வேலை - முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சவூதி அரேபியாவில் செவிலியர் பணிவாய்ப்புகளை அறிவித்துள்ளது. B.Sc Nursing படிப்புடன் இரண்டு வருட பணி அனுபவம் உள்ள 35 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். 

2 Min read
Author : Ajmal Khan
Published : Feb 04 2025, 10:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கை நிறைய சம்பளம்   சவூதியில் வேலை

கை நிறைய சம்பளம் - சவூதியில் வேலை

தமிழக அரசு சார்பாக தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, சொந்த தொழில் செய்ய பயிற்சி உள்ளிட்டவைகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என விரும்புபவர்களுக்காக தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் சார்பாக அவ்வப்போது வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன் படி, அதிக பணம் கொடுத்து ஏமாறுவதை தவிர்க்கும் வகையில் தற்போது சவூதியில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
செவிலியர்களுக்கு வேலை வாய்ப்பு

செவிலியர்களுக்கு வேலை வாய்ப்பு

அதன் படி, சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் B.sc Nursing -யில் தேர்ச்சி பெற்று 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவிலியர்கள் பணிக்கான நேர்காணல் வருகிற 23.02.2025 முதல் 26.02.2025 வரை கொச்சியில் (KOCHI) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

34
விண்ணப்பிக்க அழைப்பு

விண்ணப்பிக்க அழைப்பு


இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும்,  மேலும் ஊதியம் மற்றும் பணி பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (044-22505886/044-22502267) (6379179200) என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்ட www.omcmanpower.tn.gov.in பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் என்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வலைதளத்தில் தவறாமல் பதிவுசெய்துகொண்டு தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம். கல்விச்சான்றிதழ் பாஸ்போட் (Passport) அனுபவச்சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa2021@gmail.com என்ற இந்நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு 18/02/2025 க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

44
சேவைக்கட்டணம் மட்டுமே வசூல்

சேவைக்கட்டணம் மட்டுமே வசூல்

சிறப்பு தகுதி - Saudi Professional Classification, HRD & Dataflow செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். படிப்பு மற்றும் பணிவிவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இந்தப்பணிக்கு தேர்வுபெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ.35,400/- மட்டும் வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Work From Home Jobs : இல்லத்தரசிகளுக்கு ஏற்ற 7 உண்மையான WFH வேலைகள்! டீசன்டான சம்பளம், நம்பகமான வாய்ப்புகள்!
Recommended image2
8th Pay Commission Basic Salary: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? DA, Fitment Factor, நிலுவைத் தொகை முழு விவரம்
Recommended image3
TNPSC Group 4: ரூ.76 ஆயிரம் சம்பளம்.! 6,500 பேருக்கு உடனே அரசு வேலை.! விண்ணப்பிப்பது எப்படி? தேர்வு எப்போது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved