- Home
- Career
- 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. ரயில்வேயில் 11,000+ வேலைகள் காத்திருக்கு.. முழு விபரம் உள்ளே
10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. ரயில்வேயில் 11,000+ வேலைகள் காத்திருக்கு.. முழு விபரம் உள்ளே
இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) உதவி லோகோ பைலட் (ALP) பதவிக்கு 11,127 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

10ஆம் வகுப்பு அரசு வேலை
இந்திய ரயில்வே துறையில் வேலை பெற விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) சார்பில் உதவி லோகோ பைலட் (ALP) பதவிக்கான 11,127 காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மண்டலங்களில் இந்த நியமனம் நடைபெறவுள்ளதால், வேலை தேடுபவர்களுக்கு இது மிகப்பெரிய சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது.
ஆர்ஆர்பி வேலை வாய்ப்பு 2026
இந்த ஆட்சேர்ப்பு இந்தியாவின் 21 முக்கிய ரயில்வே மண்டலங்களில் நடைபெறும். சென்னை, மும்பை, பெங்களூரு, செக்குந்தராபாத் உள்ளிட்ட நகரங்களில் இந்த பணிகள் உள்ளன. அதிக அளவில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, போட்டி இருந்தாலும் தேர்வு வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரயில்வே வேலை
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும். அதனுடன் ஐடிஐ அல்லது தொடர்புடைய துறையில் டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்ப செயல்முறை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும். மே 15 முதல் விண்ணப்பங்கள் தொடங்கும் நிலையில், ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம் ரூ.19,900 வழங்கப்படும். இதனுடன் மத்திய அரசின் பல்வேறு அலவன்ஸ்கள் மற்றும் நலன்களும் கிடைக்கும்.
தேர்வு முறை
தேர்வு செயல்முறையில் பல கட்டங்கள் உள்ளன. முதலில் CBT-1 மற்றும் CBT-2 என இரண்டு கணினி அடிப்படையிலான தேர்வுகள் நடைபெறும். பின்னர் திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெறும். இந்த அனைத்து நிலைகளையும் வெற்றிகரமாக முடித்தவர்களே இறுதியாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் விரைவில் முழுமையான அறிவிப்பில் வெளியாகும்.

