- Home
- Career
- Railway Jobs 2026: ரயில்வேயில் 6,500+ காலிப்பணியிடங்கள்! 10ம் வகுப்பு போதும்! எப்படி விண்ணப்பிப்பது?
Railway Jobs 2026: ரயில்வேயில் 6,500+ காலிப்பணியிடங்கள்! 10ம் வகுப்பு போதும்! எப்படி விண்ணப்பிப்பது?
Railway Jobs 2026: இந்தியன் ரயில்வே 6,500+ காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடுகிறது. 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும். எப்படி விண்ணப்பிப்பது? எவ்வளவு சம்பளம்? என்பது குறித்து பார்ப்போம்.

இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு
எப்படியாவது ஒரு அரசு வேலைக்கு சென்று விட வேண்டும் என நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து வருகின்றனர். பெரும்பாலானோர் மற்ற வேலைகளுக்கு கூட செல்லாமல் முழு நேரமாக அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு வந்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும், இந்திய ரயில்வேயில் வேலைக்கு சேரலாம்.
அதாவது ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), 6,500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான (Indian Railways Recruitment 2026) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆரம்பத்திலேயே நல்ல சம்பளம் கிடைக்கும். இது தொடர்பான முழு விவரங்களையும் பார்க்கலாம்.
ரயில்வே வேலைக்கு என்ன கல்வித் தகுதி வேண்டும்?
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெக்னீஷியன் கிரேடு 1 சிக்னல் மற்றும் டெக்னீஷியன் கிரேடு 3 ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் எடுக்கப்பட உள்ளனர். மொத்தமாக 6,565 காலிப் பணியிடங்கள் உள்ளன.
டெக்னீஷியன் கிரேடு 1 சிக்னல் (Technician Grade 1 Signal) பதவிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து பி.எஸ்சி (B.Sc) அல்லது இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், டெக்னீஷியன் கிரேடு 3 (Technician Grade 3) பதவிக்கு விண்ணப்பிக்க, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் NCVT/SCVT அங்கீகாரம் பெற்ற டிரேடில் ஐடிஐ (ITI) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை எப்படி இருக்கும்?
RRB டெக்னீஷியன் பதவிக்கு கணினி வழித் தேர்வு (Computer Based Test), சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification) மற்றும் மருத்துவப் பரிசோதனை (Medical Test) அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் அனைத்து நிலைகளிலும் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.
சம்பள விவரம்
டெக்னீஷியன் கிரேடு 1 சிக்னல் பதவிக்கு தேர்வானால், மாதந்தோறும் பே லெவல் 5-இன் படி ₹29,200 முதல் சம்பளம் வழங்கப்படும். டெக்னீஷியன் கிரேடு 3 பதவிக்கு தேர்வானால், மாதந்தோறும் ₹19,900 முதல் சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு என்ன?
டெக்னீஷியன் கிரேடு 1 சிக்னல் பதவிக்கு விண்ணப்பிக்க 18 முதல் 36 வயது வரை இருக்க வேண்டும். டெக்னீஷியன் கிரேடு 3 பதவிக்கு 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
வேலை தேடுபவர்கள் ஆன்லைன் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம். அதற்கான வழிமுறைகள் இதோ:
இந்த வேலைக்கு வரும் ஜூன் 30-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 29 ஆகும்.
முதலில், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
முக்கிய பொது இணையதளம்: https://www.rrbcdg.gov.in (மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்)
சென்னை மண்டலத்திற்கான இணையதளம்: https://www.rrbchennai.gov.in
இந்த இணையதளங்களுக்கு சென்று ஆட்சேர்ப்பு அறிவிப்பைக் கண்டுபிடித்து கிளிக் செய்யுங்கள்.
விண்ணப்பப் படிவத்தை உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கொண்டு சரியாகப் பூர்த்தி செய்யுங்கள்.
தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யுங்கள்.
இறுதியாக, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

