- Home
- Career
- Bank recruitment : சம்பளம் ₹ 93,960.. தமிழ்நாட்டில் வேலை.. பஞ்சாப் & சிந்து வங்கியில் கோல்டன் சான்ஸ்! மிஸ் பண்ணாதீங்க!
Bank recruitment : சம்பளம் ₹ 93,960.. தமிழ்நாட்டில் வேலை.. பஞ்சாப் & சிந்து வங்கியில் கோல்டன் சான்ஸ்! மிஸ் பண்ணாதீங்க!
Bank recruitment பஞ்சாப் & சிந்து வங்கியில் கிரெடிட் மேனேஜர் மற்றும் அக்ரிகல்சர் மேனேஜர் பதவிகளுக்கு 190 காலியிடங்கள். ரூ.93,960 வரை சம்பளம் பெறலாம்.

பஞ்சாப் & சிந்து வங்கியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு
பஞ்சாப் & சிந்து வங்கியில் கிரெடிட் மேனேஜர் (Credit Manager) மற்றும் அக்ரிகல்சர் மேனேஜர் (Agriculture Manager) பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாடு முழுவதும் மொத்தம் 190 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் இந்தப் பணிகளுக்கான இடங்கள் உள்ளன. மத்திய அரசு வேலையாக இருப்பதால், இது ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 10, 2025. ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் மற்றும் கல்வி தகுதி விவரங்கள்
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, கிரெடிட் மேனேஜர் பதவிக்கு 130 இடங்களும், அக்ரிகல்சர் மேனேஜர் பதவிக்கு 60 இடங்களும் காலியாக உள்ளன. கிரெடிட் மேனேஜர் பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சி.ஏ/சி.எம்.ஏ/சி.எஃப்.ஏ/எம்.பி.ஏ (நிதி) போன்ற தகுதிகள் அவசியம். அக்ரிகல்சர் மேனேஜர் பணிக்கு, வேளாண்மை, தோட்டக்கலை, பால்வளம், கால்நடை அறிவியல், மீன்வளம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டு பதவிகளுக்கும் மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு, கட்டணம்
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க, 23 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் தகுதியுடையவர்கள். அரசு விதிகளின்படி, SC/ST, OBC பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. விண்ணப்பக் கட்டணம் ST/SC/PwBD பிரிவினருக்கு ரூ.100 ஆகவும், மற்றவர்களுக்கு ரூ.850 ஆகவும் உள்ளது.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதி தகுதிப் பட்டியல் (Final Merit List) மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படிப்பது அவசியம்.