MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு! தேர்வே கிடையாது! 10வது படித்திருந்தால் போதும்!

போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு! தேர்வே கிடையாது! 10வது படித்திருந்தால் போதும்!

போஸ்ட் ஆபிஸ் ஆயுள் காப்பீடு திட்டத்தின் முகவர் பணிக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இந்திய வேலைக்கு தேர்வே எழுதத் தேவையில்லை. வரும் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்பவர்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

1 Min read
Author : SG Balan
Published : Dec 23 2024, 11:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Post Office Insurance Agent Job

Post Office Insurance Agent Job

போஸ்ட் ஆபிஸ் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கான நேர்காணல் சென்னையில் நடைபெற உள்ளது. குறைந்தது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் காப்பீடு முகவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். காப்பீடு முகவர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

26

சுய தொழில் செய்பவர்கள், இதற்கு முன் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் முகவராக வேலை செய்த அனுபவம் உள்ளவர்கள் அங்கன்வாடி, மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழுகளின் உறுப்பினர்கள், முன்னாள் ராணுவப் பணியாளர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் உள்பட அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

36

ஆயுள் காப்பீட்டுத் துறையில் முன் அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில் தேர்ச்சி, வசிக்கும் பகுதியைப் பற்றிய நன்றாக அறிந்திருப்பது ஆகிய தகுதிகள் இருந்தால் இந்த வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம்.

46

முக்கியமான இரண்டு நிபந்தனைகள் உள்ளன. சென்னை மாநகராட்சியைச் சேர்ந்தவர்கள்தான் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். வேறு காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் முகவராக இருப்பவர்கள் போஸ்ட் ஆபிஸ் ஆயுள் காப்பீட்டு முகவராக முடியாது.

56

சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஜனவரி 4ஆம் தேதி காலை 10.30 மணி முதல் ஆயுள் காப்பீட்டு முகவர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடைபெறும். மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வயது மற்றும் முகவரி சான்றுகள், கல்வித்தகுதி சான்றிதழ்கள் ஆகியவற்றின் அசல் மற்றும் 2 நகல்களை நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

66

தேர்வாகும் நபர்கள் ரூ.5000 மதிப்புள்ள தேசிய சேமிப்பு பத்திரம் [NSC] அல்லது கிசான் விகாஸ் பத்திரம் [KVP] பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும். வேலையை சேர்ந்த பிறகு பிடித்துக் கொடுக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வருமானம் கிடைக்கும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
அஞ்சல் அலுவலகம்
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
சிபிஎஸ்இ அக்கவுண்டன்சியில் அசால்ட்டா 90+ மார்க் அள்ளலாம்! மாணவர்களே.. தேர்வுக்கு முன் இதை கட்டாயம் செக் பண்ணுங்க!
Recommended image2
அலர்ட்! நீங்க படிக்கும் காலேஜ் இதுல இருக்கா? 32 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டது UGC!
Recommended image3
2273 காலியிடங்கள்.. வங்கி வேலை விரும்புவோருக்கு சூப்பர் வாய்ப்பு.. உடனே அப்ளை செய்யுங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved