MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Bank Jobs: டிகிரியுடன், உள்ளூர் மொழி தெரியுமா? அப்படின்னா, பொதுத்துறை வங்கியில் வேலை கன்பார்ம்.!

Bank Jobs: டிகிரியுடன், உள்ளூர் மொழி தெரியுமா? அப்படின்னா, பொதுத்துறை வங்கியில் வேலை கன்பார்ம்.!

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. டிகிரி முடித்து, உள்ளூர் மொழி அறிவு (தமிழ்) உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 27 2025, 07:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
உள்ளூர் மொழி தெரியுமா? அப்ப வேலை கன்பார்ம்
Image Credit : Getty

உள்ளூர் மொழி தெரியுமா? அப்ப வேலை கன்பார்ம்

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), Local Bank Officer பணியிடங்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கியுள்ளது. டிகிரி முடித்தவர்கள் எளிதாக விண்ணப்பிக்கக்கூடிய இந்த வேலைவாய்ப்பு, மாநில வாரியான உள்ளூர்மொழித் திறனுக்கு முன்னுரிமை வழங்குவதால், குறிப்பாக தமிழகத்திலிருந்து விண்ணப்பிப்போருக்கு தமிழ் மொழி அறிவு ஒரு முக்கிய நிபந்தனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 750 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பொதுப்பிரிவு – 336, OBC – 194, EWS – 67, SC – 104, ST – 49 என பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 17 மாநிலங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதிக காலியிடங்கள் மகாராஷ்டிரா (135), குஜராத் (95), தெலுங்கானா (88), அசாம் (86), கர்நாடகா (85) மற்றும் தமிழ்நாடு (85) ஆகிய மாநிலங்களில் காணப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழியில் திறமை வேண்டும். 10ஆம் வகுப்பில் அந்த மாநில மொழியை படித்திருந்தால், தனியாக மொழித் தேர்வு எழுத வேண்டியதில்லை. இல்லை என்றால், மொழித் திறன் தேர்வு கட்டாயமாகும். 

22
உடனே விண்ணப்பிக்கனும் மக்களே.!
Image Credit : Getty

உடனே விண்ணப்பிக்கனும் மக்களே.!

வயது வரம்பு: ஜூலை 1 அடிப்படையில் 20–30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். OBC-க்கு 3 ஆண்டுகள் மற்றும் SC/ST-க்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை: 

  • 4 கட்டங்களில் தேர்வு நடைபெறும்
  • ஆன்லைன் எழுத்துத்தேர்வு (150 மதிப்பெண்கள்)
  • நேர்முகத் தேர்வு (50 மதிப்பெண்கள்)
  • உள்ளூர்மொழித் திறன் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

எழுத்துத் தேர்வில் ரீசனிங், பொது அறிவு, கம்ப்யூட்டர் அப்ட்டியூட் போன்றவை இடம்பெறும். நெகட்டிவ் மார்க் உண்டு. நேர்முகத்தில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற வேண்டும் (SC/ST – 22.5).

விண்ணப்பிக்கும் முறை: முழுக்க ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கடைசி நாள் – டிசம்பர் 1. தேர்வு டிசம்பர் அல்லது ஜனவரியில் நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவுக்கு ₹1180 மற்றும் SC/ST பிரிவுக்கு ₹59.விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்து விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

Related Articles

Related image1
Job Offer: 8th,12th முடித்தோருக்கு உள்ளூரில் அரசு வேலை.! தினசரி பேட்டாவுடன் கைநிறைய சம்பளம் காத்திருக்கு.!
Related image2
Job Vacancy: டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.85 ஆயிரம் சம்பளம்! 300 இளைஞர்களை அழைக்கிறது மத்திய அரசு காப்பீட்டு நிறுவனம்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெளிநாட்டில் படிக்க ஆசையா? பணம் ஒரு தடையல்ல! - இந்திய மாணவர்களுக்கு ரூ. 75 லட்சம் 'ஸ்காலர்ஷிப்' - மெகா உதவித்தொகை!
Recommended image2
CUET PG 2026: எந்த ஊரில் உங்களுக்குத் தேர்வு? - 'சிட்டி சிலிப்' வெளியீடு! உடனே செக் பண்ணுங்க!
Recommended image3
ரிசல்ட் வந்துருச்சு! - மெட்ராஸ் யுனிவர்சிட்டி 2026 தேர்வு முடிவுகளைப் பார்ப்பது எப்படி? முழு விவரம்!
Related Stories
Recommended image1
Job Offer: 8th,12th முடித்தோருக்கு உள்ளூரில் அரசு வேலை.! தினசரி பேட்டாவுடன் கைநிறைய சம்பளம் காத்திருக்கு.!
Recommended image2
Job Vacancy: டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.85 ஆயிரம் சம்பளம்! 300 இளைஞர்களை அழைக்கிறது மத்திய அரசு காப்பீட்டு நிறுவனம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved