ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் (OICL) 300 நிர்வாகி அதிகாரி (AO) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. டிகிரி முடித்த பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம், தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ₹85,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
பட்டதாரி இளைஞர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு
மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான Oriental Insurance Company (OICL) 300 நிர்வாகி அதிகாரி (Administrative Officer – AO) பணியிடங்கள் நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிகிரி முடித்தால் போதும் என்பதால் பட்டதாரி இளைஞர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாகும். டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் நாடு முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட கிளைகளுடன் பொதுத்துறை காப்பீட்டுத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது.
பணியிடங்கள்
- AO (Generalist) – 285
- AO (Hindi Officer) – 15
ஜென்ரலிஸ்ட் பதவிக்கு எந்த ஒரு பிரிவிலும் டிகிரி முடித்திருக்க வேண்டும். ஹிந்தி அதிகாரி பணிக்கு ஆங்கிலம்/இந்தி பாடங்களுடன் முதுகலை பட்டம் அவசியம்.
வயது வரம்பு
15.12.2025 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது கணக்கிடப்படும்.
பொது பிரிவு: 21 – 30 வயது
இன அமைப்பு தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- மாற்றுத் திறனாளிகள் – 10 ஆண்டுகள்
சம்பளம்
இந்த நிர்வாகி அதிகாரி பணியில் மாதம் ₹85,000 வரை சம்பளம் கிடைக்கும். அரசு சம்பள கட்டமைப்பின் அடிப்படையில் பல்வேறு அலவன்ஸ்களும் வழங்கப்படும்.
தேர்வு முறை
தேர்வு இரண்டு நிலைகளில் நடைபெறும்:
- Tier 1 – Online Test: 10.01.2026
- Tier 2 – Online Test: 28.02.2026 இதனைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வின் மூலம் இறுதி தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் தேதி
- ஆரம்ப தேதி: 01.12.2025
- கடைசி தேதி: 15.12.2025
இந்த வேலைவாய்ப்பு பட்டதாரிகள், குறிப்பாக அரசு நிறுவனங்களில் நிலையான வேலை தேடுபவர்கள் தவறவிடக்கூடாத ஒரு சிறந்த வாய்ப்பாகும். பணியின் நிலைத்தன்மை, உயர்ந்த சம்பளம், பதவி உயர்வு வாய்ப்புகள் ஆகியவை OICL-ஐ ஒரு சிறந்த பயணமாக மாற்றுகின்றன.


