பள்ளி மாணவர்களுக்கு ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1.25 லட்சம் வரை ஸ்காலர்ஷிப்! விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமரின் யஷஸ்வி ஸ்காலர்ஷிப் திட்டம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாண மாணவிகளுக்கு பள்ளியில் படிக்கும்போதே உதவித்தொகை வழங்கப்படுகிறது.
Student Scholarship
ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரதமரின் யஷஸ்வி ஸ்காலர்ஷிப் திட்டம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாண மாணவிகளுக்கு பள்ளியில் படிக்கும்போதே உதவித்தொகை வழங்கப்படுகிறது.
School Education Scholarship
இந்த திட்டம் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. OBC, EBC, DNT, NT மற்றும் SNT பிரிவுகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
Scholarship for school education
பிரதமரின் யஷஸ்வி ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகையை பெற முடியும். மெரிட் அடிப்படையில் தகுதியான மாணவர்களுக்கு இந்த ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். இதனால், எழுத்தத் தேர்வு நடத்தப்பட்டு மெரிட் பட்டியல் தயாரிக்கப்படும்.
PM Yashasvi Scholarship Scheme
எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் குடும்பத்தின் ஆண்டு வருவாய் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.75,000 முதல் ரூ.1,25,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.
School Scholarship
யஷஸ்வி ஸ்காலர்ஷிப் திட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.75,000 உதவித்தொகை வழங்கப்படும். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,25,000 உதவித்தொகை கொடுக்கப்படும்.
Scholarship Application
https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9ஆம் வகுப்பு அல்லது 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியும்.
Scholarship Schemes
இத்திட்டத்தில் ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கும் 9ஆம் வகுப்பு மாணவர்கள் 8ஆம் வகுப்பில் 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். அதேபோல, 11ஆம் வகுப்பு மாணவர்களும் 10ஆம் வகுப்பில் 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
PM Scholarship Scheme
பிரதமரின் யஷஸ்வி ஸ்காலர்ஷிப் திட்டத்தில் பலன் அடைய விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருப்பது முக்கியம். தேசிய தேர்வு முகமையின் இணையதளம் மூலம் இந்த உத்தவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.