MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • கல்விக் கடனுக்கு ரூ.7.5 லட்சம் வரை கேரண்டி! 3% வட்டி மானியம்! மத்திய அரசின் வித்யாலக்ஷ்மி திட்டம்!

கல்விக் கடனுக்கு ரூ.7.5 லட்சம் வரை கேரண்டி! 3% வட்டி மானியம்! மத்திய அரசின் வித்யாலக்ஷ்மி திட்டம்!

தரமான உயர்கல்வியைப் பெறுவதற்கு உதவும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியா முழுவதும் உள்ள திறமையான மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா என்று அழைக்கப்படும் இத்திட்டத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

1 Min read
Author : SG Balan
Published : Nov 07 2024, 11:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
PM Vidyalaxmi Scheme

PM Vidyalaxmi Scheme

எந்தவொரு இளைஞரும் மேல்படிப்பைத் தொடர நிதி ஒரு தடையாக இருக்காது என்பதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், சிறந்த 860 உயர்கல்வி நிறுவனங்களில் (QHEIs) சேரும் மாணவர்களுக்கு பிணையமில்லாத கடன் வழங்கப்படும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
PM Vidyalaxmi Yojana

PM Vidyalaxmi Yojana

எளிமையாக வடிவமைக்கப்பட்ட இத்திட்டத்தில் வெளிப்படைத்தன்மையுடன் முற்றிலும் டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு 75% கடன் உத்தரவாதத்தை வழங்கும். அதாவது, 7.5 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் கிடைக்கும். இதனால் வங்கிகள் அதிக நம்பிக்கையுடன் மாணவர்களுக்குக் கடன்களை வழங்க முன்வரலாம்.

36
PM Vidyalaxmi Scheme Education Loan

PM Vidyalaxmi Scheme Education Loan

ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தில் பயன் பெறலாம். .10 லட்சம் வரையிலான கடனுக்கு 3% வட்டி மானியமும் கிடைக்கும்.

46
PM Vidyalaxmi Scheme Collateral-free loan

PM Vidyalaxmi Scheme Collateral-free loan

இத்திட்டத்தில் அரசு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மற்றும் தொழில்நுட்ப / தொழில்முறைப் படிப்புகளைத் தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 2024-25 முதல் 2030-31 வரை ரூ.3,600 கோடி இத்திட்டத்திற்காகச் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் 7 லட்சம் மாணவர்கள் இந்த வட்டி மானியத்தின் பலனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

56
PM Vidyalaxmi Scheme interest subvention

PM Vidyalaxmi Scheme interest subvention

ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சம் வரை வருவாய் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முழு வட்டி மானியம் வழங்கும் தற்போதைய திட்டங்களின் அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. தரமான உயர்கல்வியை உறுதி செய்வதற்கான மத்திய அரசின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் வித்யாலக்ஷ்மி திட்டம் உள்ளது.

66
PM Vidyalaxmi Scheme Eligibility

PM Vidyalaxmi Scheme Eligibility

உயர்கல்வித் துறை சார்பில் வித்யாலக்ஷ்மி திட்டத்திற்கான ஆன்லைன் போர்ட்டல் உருவாக்கப்படும். அதில் மாணவர்கள் கல்விக் கடனுக்கும் வட்டி மானியத்திற்கும் விண்ணப்பிக்க முடியும். ஈ-வவுச்சர் மற்றும் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (CBDC) வாலட்கள் மூலம் வட்டி மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Nadu Government Jobs: தமிழக அரசு அதிரடி.! 8,000 பேருக்கு அரசு வேலை? எப்போ ஆட்கள் தேர்வு? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Recommended image2
8th Pay Commission: 1.83 முதல் 4 வரை ஃபிட்மென்ட் ஃபேக்டர்? யாருக்கு எவ்வளவு சம்பளம் உயரும்?
Recommended image3
Special TET Exam : ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு ..TRB அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved