NSPCL-ல் அசத்தல் வேலைவாய்ப்பு! உதவி அலுவலர் பணி – சம்பளம் ₹30,000!
NTPC - SAIL Power Company Limited (NSPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி அலுவலர் (Assistant Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமையான இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு! இந்த வேலைவாய்ப்பு குறித்த கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவன விவரம்:
நிறுவனம்: NTPC - SAIL Power Company Limited
வேலை வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள்: 05
பணியிடம்: இந்தியா
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.05.2025
பணியிட விவரங்கள்:
பணியின் பெயர்: உதவி அலுவலர் (சுற்றுச்சூழல் மேலாண்மை) (Assistant Officer - Environment Management)
சம்பளம்: மாதம் ₹30,000 - ₹1,20,000
காலியிடங்கள்: 03
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் சுற்றுச்சூழல் துறையில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் அல்லது குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் சுற்றுச்சூழல் பொறியியல் / சுற்றுச்சூழல் அறிவியல் / சுற்றுச்சூழல் மேலாண்மையில் முழு நேர முதுகலைப் பட்டம் / முதுகலை டிப்ளமோ / எம்.எஸ்சி / எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
Job Opportunity In Bihar
பணியின் பெயர்: உதவி அலுவலர் (பாதுகாப்பு) (Assistant Officer - Safety)
சம்பளம்: மாதம் ₹30,000 - ₹1,20,000
காலியிடங்கள்: 02
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / சிவில் / உற்பத்தி / கெமிக்கல் / கட்டுமான / கருவி ஆகிய ஏதேனும் ஒரு துறையில் 60% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மத்திய தொழிலாளர் நிறுவனம் / பிராந்திய தொழிலாளர் நிறுவனத்திடம் இருந்து தொழில் பாதுகாப்பு குறித்த டிப்ளமோ / அட்வான்ஸ் டிப்ளமோ / முதுகலை டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
SC / ST / PwBD / XSM - கட்டணம் இல்லை
Others - ₹300
தேர்வு முறை:
Online Test (ஆன்லைன் தேர்வு)
Interview (நேர்முகத் தேர்வு)
Document Verification (ஆவண சரிபார்ப்பு)
இதையும் படிங்க: வேலையில்லா இளைஞர்களுக்கு அரசு வழங்குகிறது உதவித்தொகை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.05.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.nspcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.