- Home
- Career
- IT Jobs: அனுபவம் வேண்டாம்! TCS-ல் வேலை பெற அரிய சந்தர்ப்பம்.! 2025, 2026 பேட்ச் விண்ணப்பம் ஓபன்!
IT Jobs: அனுபவம் வேண்டாம்! TCS-ல் வேலை பெற அரிய சந்தர்ப்பம்.! 2025, 2026 பேட்ச் விண்ணப்பம் ஓபன்!
முன்னணி ஐடி நிறுவனமான TCS, 2025 மற்றும் 2026-ல் பட்டம் பெறும் B.Sc, BCA, மற்றும் B.Voc மாணவர்களுக்காக Ignite மற்றும் Smart Hiring மூலம் மாபெரும் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.

B.Sc / BCA படித்தவர்களுக்கு TCS-இல் மாஸ் வேலைவாய்ப்பு
முன்னணி ஐடி நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), 2025 மற்றும் 2026 ஆண்டுகளில் பட்டம் பெற உள்ள B.Sc, BCA மற்றும் B.Voc (IT / CS) மாணவர்களுக்காக மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு TCS Ignite Hiring மற்றும் TCS Smart Hiring என்ற இரண்டு முக்கிய பிரிவுகளில் நடைபெறுகிறது. குறிப்பாக இன்ஜினியரிங் படிக்காத மாணவர்களுக்கு, ஐடி துறையில் நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்யும் அரிய வாய்ப்பாக இது கருதப்படுகிறது.
இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர்களுக்கும் வாய்ப்பு
இந்த ஆட்சேர்ப்பிற்கு B.Sc (Computer Science, IT, Mathematics, Physics, Chemistry, Statistics, Data Science, Cyber Security, Electronics போன்ற துறைகள்), BCA மற்றும் B.Voc (CS/IT) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முந்தைய வேலை அனுபவம் அவசியமில்லை என்பதால், புதிதாக படிப்பை முடித்த மாணவர்களும், இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர்களும் இதில் கலந்து கொள்ள முடியும். ஆனால் Engineering (BE / B.Tech) பட்டதாரிகள் இந்த Hiring-க்கு விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு பயிற்சி வழங்கப்படும்
TCS Ignite Hiring தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, “Science to Software” என்ற சிறப்பு பயிற்சி வழங்கப்படும். இதில் Artificial Intelligence, Machine Learning, Cloud Computing, Cyber Security, Blockchain போன்ற நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கப்படும். அதேபோல் TCS Smart Hiring மூலம் Techno-Functional Roles, IT Support, Data Analytics, Testing போன்ற பணியிடங்களில் நியமனம் செய்யப்படும். இரு பிரிவுகளிலும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பம் தொடக்கம்
இந்த வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பம் தற்போது தொடங்கியுள்ளது. மாணவர்கள் TCS NextStep Portal மூலம் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 11, 2026 ஆகும். தேர்வு செயல்முறையில் Aptitude Test (Verbal, Numerical, Reasoning) மற்றும் Coding (Optional) போன்ற பகுதிகள் இடம்பெறும். தேர்வு தேதிகள் மற்றும் இட விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
உடனடியாக விண்ணப்பிப்பது நல்லது
மொத்தத்தில், இன்ஜினியரிங் அல்லாத பட்டதாரிகளுக்கு TCS போன்ற முன்னணி நிறுவனத்தில் வேலை பெறும் கனவை நனவாக்கும் தங்க வாய்ப்பு இது. ஆர்வமுள்ள மாணவர்கள் கடைசி தேதியை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிப்பது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது.

