MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • AI ரெஸ்யூம் வைச்சிருக்கீங்களா? உஷார்! நிறுவனங்கள் சொல்வது இதுதான்.

AI ரெஸ்யூம் வைச்சிருக்கீங்களா? உஷார்! நிறுவனங்கள் சொல்வது இதுதான்.

LinkedIn லிங்க்ட்இன் 2026 அறிக்கையின்படி, 74% இந்திய நிறுவனங்கள் திறமையான ஊழியர்களைக் கண்டறிய சிரமப்படுகின்றன. AI மூலம் தயாரிக்கப்படும் ரெஸ்யூம்கள் வேலைவாய்ப்பைப் பாதிக்கிறதா? முழு விவரம் உள்ளே.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Feb 05 2026, 08:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
LinkedIn
Image Credit : Gemini

LinkedIn

இந்தியாவில் வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் கொரோனாவுக்கு முந்தைய காலத்தை விட 40% அதிகரித்துள்ளன. ஆனால், வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு (Recruiters) இது ஒரு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. லிங்க்ட்இன் (LinkedIn) வெளியிட்டுள்ள சமீபத்திய 2026 அறிக்கையின்படி, 74% இந்திய நிறுவனங்கள் தகுதியான விண்ணப்பதாரர்களைக் கண்டறிய முடியாமல் திணறுகின்றன. வேலைக்கு ஆட்கள் தேவை, ஆனால் சரியான ஆட்கள் கிடைப்பதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
AI ரெஸ்யூம்: வரமா? சாபமா?
Image Credit : Getty

AI ரெஸ்யூம்: வரமா? சாபமா?

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால், பலரும் இப்போது சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற கருவிகள் மூலம் நொடியில் ரெஸ்யூம்களை (Resume) தயார் செய்து விடுகிறார்கள். இதுவே இப்போது பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.

• கூட்டம் அதிகம், தரம் குறைவு: ஒரு வேலைக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிகின்றன. ஆனால், அதில் பெரும்பாலானவை AI மூலம் உருவாக்கப்பட்டவை என்பதால், விண்ணப்பதாரரின் உண்மையான திறமையை (Genuine Skills) அறிவது நிறுவனங்களுக்குச் சவாலாக உள்ளது.

• நம்பகத்தன்மை கேள்விக்குறி: 50%-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், AI மூலம் வரும் விண்ணப்பங்களில் எது உண்மையானது, எது போலியானது என்று கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதாகக் கூறுகின்றன.

35
திறமைக்கும் தேவைக்கும் உள்ள இடைவெளி (Skill Gap)
Image Credit : Getty

திறமைக்கும் தேவைக்கும் உள்ள இடைவெளி (Skill Gap)

ஒரு பக்கம் AI கருவிகள் வேலை தேடுவதை எளிதாக்கினாலும், மறுபுறம் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது வேறு ஒன்றாக உள்ளது. "எங்களுக்கு வெறும் பட்டங்கள் (Degrees) அல்லது பழைய வேலை அனுபவம் முக்கியமல்ல; வேலையைச் செய்து முடிக்கும் திறமை (Skills) தான் முக்கியம்" என்று லிங்க்ட்இன் அதிகாரி ருச்சி ஆனந்த் கூறுகிறார். ஆனால், விண்ணப்பதாரர்களோ இந்த மாற்றத்திற்குத் தயாராக இல்லை என்பதே வருத்தமான செய்தி.

45
AI-ஐ எப்படி சரியாகப் பயன்படுத்துவது?
Image Credit : google

AI-ஐ எப்படி சரியாகப் பயன்படுத்துவது?

பிரச்சனை AI-ல் இல்லை, அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் உள்ளது. நிறுவனங்களும் இப்போது சரியான ஆட்களைத் தேர்வு செய்ய AI-ஐயே நம்பத் தொடங்கியுள்ளன.

• 2026-ல் சுமார் 80% நிறுவனங்கள் ஆட்களைத் தேர்வு செய்ய AI கருவிகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

• வீடியோ நேர்காணல்கள் (Screening Interviews) மற்றும் திறனறித் தேர்வுகள் நடத்த AI பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

55
வேலை தேடுபவர்களுக்கு டிப்ஸ்
Image Credit : Getty

வேலை தேடுபவர்களுக்கு டிப்ஸ்

1. AI-ஐ நம்பி ஏமாறாதீர்கள்: ரெஸ்யூமை AI மூலம் உருவாக்கினாலும், அதை உங்கள் சொந்த வார்த்தைகளில் திருத்தி, உங்கள் உண்மையான திறமைகளைச் சேருங்கள்.

2. திறமையை வளருங்கள்: வெறும் படிப்பை மட்டும் நம்பாமல், துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.

3. நேர்மை முக்கியம்: இல்லாத திறமையை இருப்பதாகக் காட்டுவது, நேர்காணலில் சிக்கலை உண்டாக்கும்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPSC Group 4: அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! 6,574 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.!
Recommended image2
8th Pay Commission Pension Hike:8-வது ஊதியக் குழு அப்டேட்! ரியல் ஜாக்பாட்.! ஒன்றரை லட்சம் ரூபாய் பென்ஷன் கிடைக்குமா?
Recommended image3
12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.63,200 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிங்க!
Related Stories
Recommended image1
பிடித்த வேலையை தட்டி தூக்கனுமா? கோடிக்கணக்கில் சம்பாதிக்கணுமா? இருக்கவே இருக்கு LinkedIn
Recommended image2
வேலை தேடுவோரே உஷார்! LinkedIn-ல் புதிய வலை.. போலி வேலை வாய்ப்பு கொடுத்து திருடும் Cyber Attack!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved