- Home
- Career
- Job Alert: ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.73,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.!மிஸ் பண்ணிடாதீங்க!
Job Alert: ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.73,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.!மிஸ் பண்ணிடாதீங்க!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கொச்சி கப்பல் கட்டும் தளம், ஐ.டி.ஐ முடித்தவர்களுக்காக 210 நிரந்தர பணியாளர் காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.எழுத்துத் தேர்வு மற்றும் நடைமுறைத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் 210 பணியாளர் பணியிடங்கள்
முழு விவரம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கொச்சி கப்பல் கட்டும் தளம் தற்போது ஐ.டி.ஐ (ITI) முடித்தவர்களுக்காக 210 பணியாளர் (Workmen) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முற்றிலும் நிரந்தர அடிப்படையில் வழங்கப்படுகிறது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 2026 ஜனவரி 23-ஆம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
பணியிடங்களின் விவரம் மற்றும் தகுதிகள்
இந்த அறிவிப்பின்படி வெல்டர், பிட்டர் , சீட் மெட்டல் ஒர்க்கர் , எலக்ட்ரீஷியன், மெக்கானிக் டீசல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், சம்பந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ (NTC/NAC) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், கப்பல் கட்டும் தளம் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பெரிய பொறியியல் நிறுவனங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.
வயது வரம்பு மற்றும் ஊதியம்
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 23 ஜனவரி 2026 அன்று 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பினும், அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 22,500 முதல் ரூ. 73,750 வரை ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை
இப்பணிகளுக்கான விண்ணப்பதாரர்கள் இரண்டு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள். முதற்கட்டமாக ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இரண்டாம் கட்டமாக அந்தந்த துறையைச் சார்ந்த நடைமுறைத் தேர்வு (Practical Test) நடத்தப்படும்.
இணையதளத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 700 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது. விருப்பமுள்ளவர்கள் கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cochinshipyard.in/ மூலம் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

