MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Job Alert: தமிழ் தெரிந்தால் ரூ.85,000 வரை சம்பளம்! வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.!

Job Alert: தமிழ் தெரிந்தால் ரூ.85,000 வரை சம்பளம்! வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.!

பஞ்சாப் & சிந்து வங்கி, 'Local Bank Officer' பணிக்காக 145 காலியிடங்களை அறிவித்துள்ளது, இதில் 65 இடங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வங்கி அனுபவம் உள்ள பட்டதாரிகள், சொந்த ஊரிலேயே நல்ல சம்பளத்துடன் பணியாற்ற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Apr 03 2026, 10:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
சொந்த ஊரில் வேலை.! கை நிறைய சம்பளம்.!
Image Credit : Getty

சொந்த ஊரில் வேலை.! கை நிறைய சம்பளம்.!

வேலை தேடுவோருக்கு ஒரு நிம்மதியான செய்தி காத்திருக்கு என்றால் அது மிகையல்ல. இன்றைய காலத்தில் நிலையான வேலை, நல்ல சம்பளம், சமூக மரியாதை – இந்த மூன்றையும் ஒரே நேரத்தில் தரக்கூடிய துறையாக வங்கித் துறை திகழ்கிறது. குறிப்பாக அரசுத்துறை வங்கிகளில் வேலை செய்வது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. அதிலும், சொந்த ஊரிலேயே பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால், அது இன்னும் சிறப்பானதாக மாறுகிறது. அந்த வகையில், Punjab & Sind Bank வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு, தமிழக இளைஞர்களுக்கு மிகப்பெரிய சந்தர்ப்பமாக உள்ளது. ‘Local Bank Officer’ பணியிடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, வங்கி அனுபவம் கொண்ட பட்டதாரிகளுக்கு ஒரு வலுவான தொழில் வளர்ச்சி பாதையை உருவாக்குகிறது. வேலை தேடும் இளைஞர்கள் தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

27
பணியிட விவரங்கள்.!
Image Credit : Asianet News

பணியிட விவரங்கள்.!

இந்த அறிவிப்பின் படி, மொத்தமாக 145 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 65 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு வேலைக்கு காத்திருப்போருக்கு இது ஜாக்பாட் ஆகும். இது ஒப்பந்த அடிப்படையிலான பணியாக இருந்தாலும், சம்பளம் மற்றும் சலுகைகள் அரசுத்துறை வங்கி தரத்திலேயே வழங்கப்படுகின்றன என்பதால் வேலை தேடும் இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பாகும். இதனால், பணியில் நம்பிக்கை மற்றும் நிலைத்தன்மை கிடைக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

Related Articles

Related image1
Business Idea : வெயில் காலம் வந்தாச்சு.! இந்த பிசினஸ் ஆரம்பியுங்க.! மாதம் லாபம் மட்டும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
Related image2
Business Ideas: ஜில்லுன்னு ஒரு சூப்பர் பிஸ்னஸ்.! குறைந் முதலீட்டில் கோடிகளை குவிக்கலாம்.!
37
கல்வித்தகுதி.!
Image Credit : Asianet News

கல்வித்தகுதி.!

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எந்த துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என்பதால் டிகிரி முடித்து வேலைக்கு காத்திருக்கும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

பணி அனுபவம் 

இந்த பணிக்கு விண்ணப்பிக்க, பட்டப்படிப்பு முடித்த பிறகு ஏதேனும் ஒரு வங்கியில் குறைந்தது 18 மாதங்கள் அதிகாரியாக பணிபுரிந்த அனுபவம் அவசியமாகும். இதன் மூலம், அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. எனவே ஒராண்டு அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

47
வயது வரம்பு
Image Credit : Asianet News

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது:20 

அதிகபட்ச வயது: 30 

அரசு விதிமுறைகளின்படி, SC/ST/OBC போன்ற பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும். மொழித்திறன்

இந்தப் பணியின் முக்கிய அம்சம் “Local Officer” என்பதால், தமிழ் மொழியில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும் வாசிக்கவும் எழுதவும் திறமை இருக்க வேண்டும். இது வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பு கொள்ள மிகவும் அவசியமான திறனாகும்.

57
ஊதியம் மற்றும் சலுகைகள்
Image Credit : Asianet News

ஊதியம் மற்றும் சலுகைகள்

இந்தப் பணிக்கான மாத சம்பளம்:

  • ₹48,480 முதல் ₹85,920 வரை
  • DA (Dearness Allowance) HRA (House Rent Allowance) மருத்துவ சலுகைகள் பிற வங்கி நலன்கள் என பல சலுகைகளும் வழங்கப்படும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட கட்டங்களின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு ஸ்கிரீனிங், நேர்காணல்,  மொழித்திறன் தேர்வு ஆகியற்றில் தேர்வாக வேண்டும். இத்தகைய அனைத்து நிலைகளிலும் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் Merit List தயாரிக்கப்பட்டு இறுதி தேர்வு செய்யப்படும்.

67
தேர்வு மையங்கள்
Image Credit : Asianet News

தேர்வு மையங்கள்

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. Chennai, Coimbatore, Madurai, மற்றும் Tiruchirappalli இல் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.  இதனால், விண்ணப்பதாரர்கள் தங்களுக்குச் சுலபமான மையத்தை தேர்வு செய்யலாம்.

விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: IBPS அதிகாரப்பூர்வ தளம் கடைசி தேதி: ஏப்ரல் 20, 2026, ஆன்லைன் விண்ணப்பத்தை சரியாக நிரப்பி, தேவையான ஆவணங்களை பதிவேற்றுவது மிக முக்கியம்.

77
வேலை நிச்சயம்.! இது வேத சத்தியம்.!
Image Credit : AI

வேலை நிச்சயம்.! இது வேத சத்தியம்.!

வங்கித் துறையில் ஏற்கனவே அனுபவம் பெற்றவர்களுக்கு, இந்த அறிவிப்பு ஒரு மிகச் சிறந்த முன்னேற்ற வாய்ப்பாகும். குறிப்பாக தமிழ்நாட்டிலேயே பணிபுரிய விரும்புபவர்களுக்கு இது ஒரு “Golden Opportunity” என்று சொல்லலாம். முறையான திட்டமிடல், தேர்வு தயாரிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் அணுகினால், இந்த வேலைவாய்ப்பை பெறுவது சாத்தியமே அல்ல – நிச்சயமாகும். அதனால், தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்கவும். உங்கள் வங்கி கனவு நனவாகும் நாள் இதுவாக இருக்கலாம்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வங்கி
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
யுபிஎஸ்சி தேர்வில் அநீதியா? ஆணிவேரையே பிடுங்கியெறியும் மத்திய அரசு! மாநிலங்களவையில் புயலை கிளப்பிய வில்சன்
Recommended image2
ஜேஇஇ மெயின் 2026: இனி கோச்சிங் சென்டர் மட்டும் போதாது! 'ஏஐ' (AI) மூலம் டாப் ரேங்க் வாங்குவது எப்படி?
Recommended image3
படிக்கும்போதே மாதம் ₹20,000 சம்பாதிக்கலாம்! இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) சூப்பர் இன்டர்ன்ஷிப் வாய்ப்பு!
Related Stories
Recommended image1
Business Idea : வெயில் காலம் வந்தாச்சு.! இந்த பிசினஸ் ஆரம்பியுங்க.! மாதம் லாபம் மட்டும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
Recommended image2
Business Ideas: ஜில்லுன்னு ஒரு சூப்பர் பிஸ்னஸ்.! குறைந் முதலீட்டில் கோடிகளை குவிக்கலாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved