- Home
- Career
- மாதம் ரூ.15,000 சம்பளத்துடன் ஐஐடி மெட்ராஸில் பயிற்சி பெற ஆசையா? அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்..
மாதம் ரூ.15,000 சம்பளத்துடன் ஐஐடி மெட்ராஸில் பயிற்சி பெற ஆசையா? அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்..
IIT Madras ஐஐடி மெட்ராஸ் கோடைக்கால பயிற்சி 2026 அறிவிப்பு வெளியானது. மாதம் ரூ.15,000 உதவித்தொகை. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் உள்ளே.அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்..

IIT Madras
இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) மெட்ராஸ், 2026-ம் ஆண்டிற்கான கோடைக்கால ஃபெல்லோஷிப் திட்டத்திற்கான (Summer Fellowship Programme) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல், அறிவியல், மற்றும் நிர்வாகத் துறையில் பயிலும் மாணவர்களுக்கு ஐஐடி பேராசிரியர்களின் வழிகாட்டுதலில் ஆராய்ச்சி செய்ய இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். இந்தப் பயிற்சியானது மே 18, 2026 முதல் ஜூலை 17, 2026 வரை நடைபெறும்.
மாதம் ரூ.15,000 உதவித்தொகை
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்குப் பயிற்சி காலத்தில் மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகையாக (Stipend) வழங்கப்படும். இதுமட்டுமின்றி, தேவைப்படும் மாணவர்களுக்குக் கட்டண அடிப்படையில் தங்கும் விடுதி மற்றும் உணவு வசதிகளும் செய்து தரப்படும். ஆராய்ச்சித் துறையில் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பொறியியல் படிப்பில் (B.E./B.Tech/B.Sc Engineering) மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த பட்டப்படிப்பில் (Integrated M.E./M.Tech) மூன்றாம் அல்லது நான்காம் ஆண்டு படிப்பவர்கள், மற்றும் M.Sc/M.A./MBA முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும் இதற்குத் தகுதியானவர்கள். ஐஐடி-யில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை என்பதை நினைவில் கொள்க.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி
ஆர்வமுள்ள மாணவர்கள் ssp.iitm.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 2, 2026 அன்று தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்கக் கடைசி தேதி மார்ச் 2, 2026 (மாலை 5 மணி வரை). புகைப்படம், ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் போனஃபைட் சான்றிதழ் (Bonafide Certificate) ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
எந்தெந்த துறைகளில் பயிற்சி?
ஏரோஸ்பேஸ், பயோடெக்னாலஜி, கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், டேட்டா சயின்ஸ் மற்றும் AI, எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் உள்ளிட்ட பல்வேறு பொறியியல் துறைகளிலும், இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற அறிவியல் துறைகளிலும், மானுடவியல் (Humanities) மற்றும் மேலாண்மை (Management) பிரிவுகளிலும் பயிற்சிகள் வழங்கப்படும்.

