MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • TNPSC Group 4: ரூ.76 ஆயிரம் சம்பளம்.! 6,500 பேருக்கு உடனே அரசு வேலை.! விண்ணப்பிப்பது எப்படி? தேர்வு எப்போது?

TNPSC Group 4: ரூ.76 ஆயிரம் சம்பளம்.! 6,500 பேருக்கு உடனே அரசு வேலை.! விண்ணப்பிப்பது எப்படி? தேர்வு எப்போது?

TNPSC Group 4 தேர்வில் 6,574 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. ரூ.76,000 வரை சம்பளம், கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு தேதி உள்ளிட்ட முழு விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்

4 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Oct 07 2026, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
கைநிறைய சம்பளத்துடன் காத்திருக்கு வேலை.!
Image Credit : Asianet News

கைநிறைய சம்பளத்துடன் காத்திருக்கு வேலை.!

TNPSC Group 4 Notification 2026: தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரே ஒரு தேர்வு மூலம் ஆயிரக்கணக்கான அரசு பணியிடங்களுக்கு போட்டியிடும் வாய்ப்பு தற்போது வந்துள்ளது. மொத்தம் 6,574 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்க இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளன.

அதிலும் குறிப்பாக, முன்பு டிசம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. ஜனவரி 10, 2027 அன்று குரூப் 4 எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. எனவே அரசு வேலைக்கு தயாராகும்வர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல், கடைசி நாள் வரை காத்திருக்காமல் விண்ணப்பிப்பது முக்கியம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
6,574 காலிப்பணியிடங்கள் – என்னென்ன வேலைகள்?
Image Credit : Google

6,574 காலிப்பணியிடங்கள் – என்னென்ன வேலைகள்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள Combined Civil Services Examination-IV (Group-IV Services) அறிவிப்பில் மொத்தம் 6,574 பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர், தனி எழுத்தர், வனக்காப்பாளர், வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் உள்ளன.

அறிவிக்கப்பட்டுள்ள 6,574 பணியிடங்கள் தற்காலிகமானவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

38
முக்கிய தேதிகள் இதோ
Image Credit : Google

முக்கிய தேதிகள் இதோ

குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் அக்டோபர் 6, 2026 முதல் தொடங்கியுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் – நவம்பர் 5, 2026 இரவு 11.59 மணி.

விண்ணப்பத்தில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதைத் திருத்துவதற்காக நவம்பர் 9 முதல் நவம்பர் 11, 2026 வரை Correction Window வழங்கப்பட்டுள்ளது.

அனைத்தையும் விட முக்கியமானது எழுத்துத் தேர்வு தேதி. ஜனவரி 10, 2027 காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

48
யார் விண்ணப்பிக்கலாம்?
Image Credit : Google

யார் விண்ணப்பிக்கலாம்?

குரூப் 4-ல் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதி ஒரே மாதிரியாக இருக்காது. பல முக்கிய பணிகளுக்கு குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானதாக உள்ளது.

ஆனால் தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர், வனக்காவலர் உள்ளிட்ட குறிப்பிட்ட பணிகளுக்கு கூடுதல் கல்வி, தொழில்நுட்பம் அல்லது அனுபவத் தகுதிகள் கேட்கப்படுகின்றன.

உதாரணமாக, Typist மற்றும் Steno-Typist பணிகளுக்கு சம்பந்தப்பட்ட தொழில்நுட்பத் தகுதிகள் அவசியம். அதேபோல் Forest Guard with Driving Licence பணிக்கு ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட கூடுதல் நிபந்தனைகள் உள்ளன. எனவே எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறோம் என்பதைப் பொறுத்து தகுதியை சரிபார்க்க வேண்டும்.

58
வயது வரம்பு எப்படி?
Image Credit : Google

வயது வரம்பு எப்படி?

விண்ணப்பதாரர்களின் வயது 01.07.2026 தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. ஆனால் அனைத்து பதவிகளுக்கும் ஒரே வயது வரம்பு கிடையாது. பதவி, சமூகப் பிரிவு மற்றும் கல்வித் தகுதியைப் பொறுத்து வயது வரம்பு மற்றும் வயது தளர்வு மாறுபடும். எனவே விண்ணப்பிக்கும் முன்பு அறிவிப்பில் இடம்பெற்றுள்ள சம்பந்தப்பட்ட பதவிக்கான வயது விதிமுறையை கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.

68
தேர்வு எப்படி நடைபெறும்?
Image Credit : our own

தேர்வு எப்படி நடைபெறும்?

குரூப் 4 தேர்வு ஒரே ஒரு எழுத்துத் தேர்வாக நடைபெறும். OMR முறையில் 200 கேள்விகள், மொத்தம் 300 மதிப்பெண்கள், 3 மணி நேரம் வழங்கப்படும்.

பகுதி – அ: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு

தமிழ் பகுதியில் 100 கேள்விகள், 150 மதிப்பெண்கள் இடம்பெறும். இந்தப் பகுதியில் குறைந்தபட்சம் 40 சதவீதம், அதாவது 60 மதிப்பெண்கள் பெறுவது கட்டாயம். இந்த குறைந்தபட்ச மதிப்பெண் பெறாதவர்களின் அடுத்த பகுதி விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படாது.

பகுதி – ஆ: பொது அறிவு

பொது அறிவுப் பகுதியில் 75 கேள்விகள் இடம்பெறும். இதில் பத்தாம் வகுப்பு தரத்திலான பாடப்பகுதிகளை மையமாகக் கொண்டு கேள்விகள் கேட்கப்படும். தமிழ்நாடு தொடர்பான முக்கிய தகவல்கள், இந்திய வரலாறு, அரசியல் அமைப்பு, பொருளாதாரம், அறிவியல், நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

பகுதி – இ: திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு

இந்தப் பகுதியில் 25 கேள்விகள் இடம்பெறும். கணித அடிப்படைகள், எண்ணியல் திறன், தர்க்க சிந்தனை, மனக்கணக்கு உள்ளிட்ட தலைப்புகளில் கேள்விகள் வரலாம்.

இவ்வாறு மொத்தம் 200 கேள்விகள் – 300 மதிப்பெண்கள் – 3 மணி நேரம் என்ற முறையில் தேர்வு நடைபெறும்.

78
தேர்ச்சி பெற எத்தனை மதிப்பெண்கள்?
Image Credit : our own

தேர்ச்சி பெற எத்தனை மதிப்பெண்கள்?

எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால் குறைந்தபட்ச மதிப்பெண் மட்டும் பெற்றால் அரசு வேலை கிடைத்துவிடும் என்று நினைக்கக் கூடாது. தேர்வில் போட்டியிடும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசையின் அடிப்படையில்தான் அடுத்தகட்டத் தேர்வு நடைபெறும். எனவே அதிக மதிப்பெண் பெறுவதற்கான இலக்குடன் தயாராவது மிகவும் முக்கியம்.

விண்ணப்பிப்பது எப்படி?

குரூப் 4 தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முதலில் TNPSC-ன் One Time Registration (OTR) முறையில் பதிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே செல்லுபடியாகும் OTR பதிவு வைத்திருப்பவர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டியதில்லை. புதிய One Time Registration செய்ய ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பதிவு ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

அதன்பிறகு Group 4 தேர்வுக்கான விண்ணப்பத்தை தனியாக சமர்ப்பிக்க வேண்டும். முக்கியமாக, One Time Registration செய்திருப்பது மட்டும் Group 4 விண்ணப்பமாக கருதப்படாது. தேர்வுக்கான தனிப்பட்ட விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

88
தேர்வுக் கட்டணம் எவ்வளவு? சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?
Image Credit : our own

தேர்வுக் கட்டணம் எவ்வளவு? சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?

Group 4 தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.100.

சில சமூகப் பிரிவுகள் மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. SC, ST, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு முழுமையான கட்டண விலக்கு விதிகள் உள்ளன. BC/MBC உள்ளிட்ட பிரிவுகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச வாய்ப்புகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு குறிப்பிட்ட சலுகையும் உள்ளது.

சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?

குரூப் 4-ல் அனைத்து பணிகளுக்கும் ஒரே சம்பள அளவு கிடையாது. பதவியைப் பொறுத்து Pay Level மாறுபடும். அறிவிக்கப்பட்டுள்ள பணிகளில் பல முக்கிய பதவிகள் Pay Level 8-ல் வருகின்றன. இந்த அளவுக்கான ஊதிய விகிதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை உள்ளது. சுருக்கெழுத்துத் தட்டச்சர் போன்ற சில பணிகள் Level 10-ல் உள்ளன. இதற்கான ஊதிய அளவு ரூ.20,600 முதல் ரூ.75,900 வரை.

அதேபோல் Forest Watcher போன்ற சில பணிகள் Level 3-ல் உள்ளன. இவற்றுக்கான ஊதிய அளவு ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை. Forest Guard with Driving Licence போன்ற பணிகள் Level 5-ல் உள்ளன; இதற்கான ஊதிய அளவு சுமார் ரூ.18,200 முதல் ரூ.57,900 வரை.

இவை Pay Matrix-ல் குறிப்பிடப்பட்ட அடிப்படை ஊதிய அளவுகள். பணியில் சேரும் இடம், அரசு விதிகளின்படி வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் பிடித்தங்கள் ஆகியவற்றைப் பொறுத்து கையில் கிடைக்கும் சம்பளம் மாறுபடும்.

மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்

குரூப் 4 தேர்வில் தமிழ் பகுதி மிகவும் முக்கியமானது. தமிழ் தகுதித் தேர்வில் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண் பெறவில்லை என்றால் அடுத்த பகுதியின் மதிப்பீடு நடைபெறாது. எனவே பொது அறிவு, Aptitude மட்டும் படித்தால் போதாது. தினசரி நேரத்தைப் பிரித்து தமிழ், பொது அறிவு, திறனறிவு ஆகிய மூன்று பகுதிகளுக்கும் தயாராக வேண்டும். மேலும் OMR தேர்வு என்பதால், மாதிரி வினாத்தாள்களை நேரம் நிர்ணயித்து எழுதிப் பார்ப்பது தேர்வுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும்.

கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம்!

குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பத்தை 05.11.2026 இரவு 11.59 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி நேரத்தில் இணையதள நெரிசல் அல்லது தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், தகுதியுள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிப்பது நல்லது.

ஒரு பக்கம் 6,574 அரசு பணியிடங்கள்; மறுபக்கம் லட்சக்கணக்கான போட்டியாளர்கள். இந்த வாய்ப்பில் வெற்றி பெறுவதற்கு விண்ணப்பிப்பது முதல் படி மட்டுமே. அடுத்த 3 மாதங்களை திட்டமிட்டு பயன்படுத்தி, தினசரி பயிற்சியுடன் தயாராகும் மாணவர்களுக்கே இந்த வாய்ப்பு சாதகமாக அமையும்.

முக்கிய குறிப்பு: குரூப் 4 தேர்வு 10.01.2027 அன்று நடைபெறும். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.11.2026 இரவு 11.59 மணி. காலியிட எண்ணிக்கை தற்காலிகமானது என்பதால், இறுதி நியமனத்திற்கு முன்பு மாற்றம் ஏற்படலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
டி.என்.பி.எஸ்.சி.
தமிழ்நாடு அரசு
தேர்வு
தேர்வு குறிப்புகள்
தேர்வு
அரசு வேலைவாய்ப்பு இணையதளம்
அரசு வேலை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
18 மாதங்களில் இல்லாத உச்சம்... இந்தியாவில் 1.2 லட்சம் டெக் வேலைகள்; யாருக்கு அதிக வாய்ப்பு?
Recommended image2
8th Pay Commission: ரிட்டயர்மென்ட்டுக்கு அப்புறம் மாசம் ரூ.68,000 பென்ஷன் கிடைக்குமா?
Recommended image3
8th Pay Commission: 8-வது ஊதியக் குழு பரிந்துரை தாமதமானால் ரூ.3.32 லட்சம் வரை நஷ்டம்! யாருக்கு பாதிப்பு?
Related Stories
Recommended image1
Business Idea: ரூ.10,000 முதலீடே போதும்.! மாதம் ரூ.30,000 சம்பாதிப்பது இவ்ளோ ஈசியா?
Recommended image2
Business Loan: தொழில் தொடங்க ரூ.20 லட்சம் வரை கடன்.! யாருக்கு கிடைக்கும்? தகுதி, ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved