MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • TNPSC குரூப்-II/IIA தேர்வுக்கு அரசு வழங்கும் இலவச பயிற்சி வகுப்பு! யாரெல்லாம், எப்படி விண்ணபிக்கலாம் ? முழுவிவரம்...

TNPSC குரூப்-II/IIA தேர்வுக்கு அரசு வழங்கும் இலவச பயிற்சி வகுப்பு! யாரெல்லாம், எப்படி விண்ணபிக்கலாம் ? முழுவிவரம்...

TNPSC குரூப்-II/IIA முதல்நிலை தேர்வுக்கு ஜூலை 21 முதல் இலவச பயிற்சி வகுப்பு. ஸ்மார்ட் போர்டு, மாதிரி தேர்வுகள், படிப்பு அரங்கு வசதி.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Jul 23 2025, 09:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அரசுப் பணி கனவை நனவாக்க அரிய வாய்ப்பு!
Image Credit : Asianet News

அரசுப் பணி கனவை நனவாக்க அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆண்டுதோறும் அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான TNPSC தேர்வு அட்டவணைப்படி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் - நிலை 2, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட 645 பணிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி II/IIA தேர்வுக்கான அறிவிக்கை 2025 ஜூலை 15 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் ஒரு சிறந்த திட்டத்தை அறிவித்துள்ளது.

25
திருநெல்வேலி வேலைவாய்ப்பு மையத்தில் தரமான பயிற்சி!
Image Credit : Google

திருநெல்வேலி வேலைவாய்ப்பு மையத்தில் தரமான பயிற்சி!

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், TNPSC குரூப் II/IIA தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 2025 ஜூலை 21 (திங்கட்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. இப் பயிற்சி வகுப்பு திறன் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு ஸ்மார்ட் போர்டு வசதியுடன் நடத்தப்படுகிறது. மேலும், வாரந்தோறும் மாதிரித் தேர்வுகளும், மாநில அளவிலான முழு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.

Related Articles

Related image1
TNPSC Group 4 Exam: தமிழில் கடினமான கேள்விகள்! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மறு தேர்வா?
Related image2
TNPSC EXAM : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாரா.! தேர்வர்களுக்கு எதிர்பாரா வெளியான சூப்பர் அறிவிப்பு
35
நூலக வசதியுடன் சுயபயிற்சிக்கு வழி!
Image Credit : Google

நூலக வசதியுடன் சுயபயிற்சிக்கு வழி!

TNPSC, TNUSRB, SSC உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான புத்தகங்கள் தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் உள்ளன. மாணவர்கள் சுயமாகப் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் வகையில் படிப்பு அரங்கு (study hall) வசதியும் உள்ளது. பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகளை [https://tamilnaducareerservices.tn.gov.in/] என்ற இணையத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

45
டெலிகிராம் சேனல் மற்றும் தொடர்புக்கு:
Image Credit : our own

டெலிகிராம் சேனல் மற்றும் தொடர்புக்கு:

போட்டித் தேர்வுகள் குறித்த தகவல்களைப் பெற, NELLAI EMPLOYMENT OFFICE என்ற டெலிகிராம் சேனலில் இணையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், 2025 ஜூலை 21 அன்று காலை 10.30 மணிக்கு, 17C, சிதம்பரம் நகர், பெருமாள்புரம் C காலனியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

55
மேலும் தகவல்களுக்கு
Image Credit : Google

மேலும் தகவல்களுக்கு

மேலும் தகவல்களுக்கு 0462-2902248 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
"படிக்கிறது ஒரு IIT-ல.. டிகிரி வாங்குறது வேறொரு IIT-ல!" - மத்திய அரசின் மாஸ் பிளான்!
Recommended image2
மாதம் ₹9,000 வரை உதவித்தொகை! மாணவர்களுக்கு லக்! - மத்திய பட்ஜெட்டில் ஒளிந்திருந்த அந்த 'ரகசிய' திட்டம்!
Recommended image3
"படிக்கிறது மட்டும் போதாது!" - பள்ளிகளுக்கு CBSE போட்ட புது கண்டிஷன் என்ன தெரியுமா?
Related Stories
Recommended image1
TNPSC Group 4 Exam: தமிழில் கடினமான கேள்விகள்! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மறு தேர்வா?
Recommended image2
TNPSC EXAM : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாரா.! தேர்வர்களுக்கு எதிர்பாரா வெளியான சூப்பர் அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved