தூத்துக்குடியில் மாணவர்களுக்கு இலவச கோடைக்கால அறிவியல் பயிற்சி முகாம்: எங்கே தெரியுமா?
தூத்துக்குடி அறிவியல் பூங்காவில் மே 3-25 வரை 3-9 ஆம் வகுப்பு தூத்துக்குடியில் மாணவர்களுக்கு இலவச கோடைக்கால அறிவியல் பயிற்சி முகாம். அறிவியல் விளையாட்டுகளுடன் கற்கலாம்!

தூத்துக்குடியில் கோடைகால அறிவியல் பயிற்சி முகாம்
தூத்துக்குடி மாணவர்களுக்கு ஒரு சூப்பர் சான்ஸ்! தூத்துக்குடி அறிவியல் பூங்காவில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் நாளை (மே 3ம் தேதி) தொடங்குகிறது! 'ஏனென்று கேள்' என்ற சூப்பரான தலைப்போடு, இந்த முகாம் மே 25ம் தேதி வரை தூத்துக்குடி மாநகராட்சியின் அறிவியல் பூங்கா வளாகத்தில் களைகட்டப் போகுது.
எந்த வகுப்பு மாணவர்கள் தகுதி
இந்த முகாமில் 3ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் முற்றிலும் இலவசமாக கலந்துக்கலாம். தினமும் மாலை 3 மணி முதல் 7 மணி வரைக்கும் உங்க அறிவியல் சிந்தனையைத் தூண்டும் விதவிதமான வகுப்புகளும், செஞ்சு பார்க்குற மாதிரியான செய்முறைப் பயிற்சிகளும் நடக்க இருக்கு.
என்னென்ன கத்துக்கலாம் தெரியுமா?
முகாமின் முதல் கட்டத்துல, கணக்கு ரொம்ப இனிப்பா இருக்கும், கையில வண்ண வண்ணமா கண்ணாம் பூச்சி செய்யலாம், புதுசு புதுசா அறிவியல் பரிசோதனைகள் பண்ணலாம். அதுமட்டுமில்லாம ஒரிகாமி, கற்பனையில கைவினைப் பொருட்கள் செய்யுறது, பொம்மலாட்டம் பார்க்குறது, பலூன்ல பொம்மைகள் உருவாக்குறதுன்னு எக்கச்சக்கமான ஜாலியான விஷயங்கள் இருக்கு. மந்திரம் மாதிரி தெரியுற தந்திரங்களை கத்துக்கலாம், அறிவியல் கோமாளியோட சேர்ந்து சிரிக்கலாம், அறிவியலை ஆனந்தமா அனுபவிக்கலாம்.
கதை சொல்லவும், புதுசா கதை உருவாக்கவும் கத்துக்கலாம். விளையாட்டே ஒரு பாடமா இருக்கும். நம்புற மாதிரியும் நம்பாத மாதிரியும் நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கலாம்!
தூத்துக்குடியில் சதுரங்க பயிற்சி
அதுபோக, தினமும் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரைக்கும் சூப்பரான பயிற்சியாளர்கள் சதுரங்க பயிற்சி கொடுப்பாங்க. அறிவியல் பூங்கால இருக்கிற எல்லா அறிவியல் கருவிகளையும் பத்தி தினமும் நிபுணர்கள் வந்து விளக்கமா சொல்லுவாங்க. முக்கியமா, "ஏன்?" ன்னு கேள்வி கேட்குற ஆர்வத்தை உங்க மனசுல விதைக்கிறதுதான் இந்த முகாமோட முக்கியமான நோக்கம்!
சனி, ஞாயிறு அறிவியல் பயிற்சி
வாரத்துல சனி, ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் 5 மணி முதல் 7 மணி வரைக்கும் உங்களுக்குப் பிடிச்ச அறிவியல் படங்களையும், குழந்தைகளுக்கான படங்களையும் சின்ன திரையில போட்டு காட்டுவாங்க. அது முடிஞ்சதும், சினிமா விமர்சகர்கள் வந்து அந்த படத்துல இருக்கிற அறிவியல் விஷயங்களை உங்களுக்குப் புரியுற மாதிரி சொல்லுவாங்க.
அறிவியல் கற்றுக் கொள்ள தகுந்த நேரம்
பெற்றோர்களே, இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! உங்க குழந்தைகளோட அறிவியல் ஆர்வத்தையும் திறமையையும் வளர்க்க இது ஒரு சரியான நேரம். அவங்களோட எதிர்கால அறிவியல் பயணத்துக்கு இது ஒரு நல்ல தொடக்கமா இருக்கும்.
முன்பதிவு செய்ய இந்த நம்பருக்கு போன் செய்யவும்
முன்பதிவு செய்யணும்னா உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க: +91 95976 13988 / +91 82207 50082. இல்லன்னா நேரா தூத்துக்குடி அறிவியல் பூங்காவுக்கு (STEM Park) போய் கூட பதிவு பண்ணலாம். சீக்கிரம் பண்ணுங்க!