சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025 விரைவில்! எப்போது தெரியுமா?
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2025 எப்போது வெளியாகும்? மாணவர்கள் தங்கள் முடிவுகளை எந்த அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பார்க்கலாம்? முழு விவரங்கள் இங்கே.

CBSE Borad Result
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட உள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெற்ற தேர்வுகளை நாடு முழுவதும் இருந்து 42 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். தங்களது மதிப்பெண் அட்டவணையை ஆன்லைனில் எப்போது பார்க்கலாம் என்ற ஆவலில் மாணவர்கள் உள்ளனர்.
கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியான தேதிகளை வைத்து இந்த ஆண்டும் எப்போது முடிவுகள் வெளியாகலாம் என்பதை இப்போது பார்ப்போம். வழக்கமாக, சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படும். கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 12 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 15 ஆம் தேதியும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டில், சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதியும் வெளியிடப்பட்டன. கோவிட்-19 தொற்று பரவியிருந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானது. அப்போது 12 ஆம் வகுப்பு முடிவுகள் ஜூலை 22 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு முடிவுகள் ஜூலை 4 ஆம் தேதியும் வெளியாகின.
cbse
இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளின் போக்குகளை வைத்து பார்க்கும்போது, சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாத மத்தியில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை எங்கே பார்ப்பது?
இந்தத் தேர்வுகளை எழுதிய மாணவர்கள் தங்களது மதிப்பெண் அட்டவணையை சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbse.gov.in, cbseresults.nic.in மற்றும் results.cbse.nic.in ஆகிய பக்கங்களில் பார்க்க முடியும்.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்:
படி 1: results.cbse.nic.in அல்லது cbseresults.nic.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
படி 2: “CBSE 10th Result 2025” அல்லது “CBSE 12th Result 2025” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 3: உங்களது ரோல் எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு பின் ஆகியவற்றை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
படி 4: சிபிஎஸ்இ தேர்வு முடிவு 2025 திரையில் தோன்றும். அதனை சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஒரு நகலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.