அரசு வேலை: ஈரோடு மாவட்டத்தில் 106 சமையல் உதவியாளர் வேலை :முழு விவரங்களுக்கு…
தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்டத்தில் 106 சமையல் உதவியாளர் வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. 10வது தேர்ச்சி/தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், தேர்வு கிடையாது.

சத்துணவுத் துறையில் சூப்பர் வாய்ப்பு! ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 106 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு நேரடி நியமனம் மூலம் ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளது. பத்தாவது தேர்ச்சி பெற்றிருந்தாலோ அல்லது தோல்வியடைந்திருந்தாலோ போதும், உங்களுக்கு அரசு வேலை உறுதி! அதுவும் எந்தவித எழுத்துத் தேர்வுமின்றி வெறும் நேர்முகத் தேர்வு மூலம் இந்த வேலைவாய்ப்பைப் பெறலாம் என்பது கூடுதல் சிறப்பு.
யார் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்?
கல்வித் தகுதி: நீங்க பத்தாவது பாஸ் பண்ணியிருந்தாலும் சரி, ஃபெயில் ஆகியிருந்தாலும் சரி, தாராளமா விண்ணப்பிக்கலாம். முக்கியமா, உங்களுக்கு நல்லா தமிழ் பேசத் தெரிஞ்சிருக்கணும்.
சம்பளம் எவ்ளோ தெரியுமா? மாசம் ரூ.3,000 முதல் ரூ.9,000 வரை சம்பளம் வாங்கலாம்.
வயது வரம்பு முக்கியம் பாஸ்!
- பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் (SC) - 21 வயசு முடிஞ்சிருக்கணும், 40 வயசுக்குள்ள இருக்கணும்.
- பழங்குடியினர் - 18 வயசு முடிஞ்சிருக்கணும், 40 வயசுக்குள்ள இருக்கணும்.
- விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவங்க - 20 வயசு முடிஞ்சிருக்கணும், 40 வயசுக்குள்ள இருக்கணும்.
விண்ணப்பக் கட்டணம் கிடையாது! எல்லாரும் இலவசமா அப்ளை பண்ணலாம்.
எப்படித் தேர்ந்தெடுப்பாங்க?
உங்களுடைய தகுதிகளை எல்லாம் சரியா பார்த்துட்டு, தகுதியானவங்கள மட்டும் நேர்முகத் தேர்வுக்கு கூப்பிடுவாங்க. சோ, உங்களுடைய அப்ளிகேஷனை நீட்டா, சரியா பூர்த்தி பண்ணுங்க!
முக்கிய தேதிகள் இதோ:
- விண்ணப்பிக்க ஆரம்பிக்கிற தேதி: 11.04.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2025 மாலை 5.45 மணி வரைக்கும்
எங்க போய் விண்ணப்பிக்கிறது?
நீங்க https://erode.nic.in/ வெப்சைட்ல போய் அப்ளிகேஷன் ஃபார்மை டவுன்லோட் பண்ணிக்கலாம்.
அப்ளிகேஷனைப் பூர்த்தி செஞ்சுட்டு, தேவையான எல்லா டாக்குமெண்ட்ஸையும் (நகல் மட்டும் போதும்):
- பள்ளி மாற்றுச் சான்றிதழ்
- SSLC மார்க் ஷீட்
- குடும்ப அட்டை
- இருப்பிட சான்று
- ஆதார் கார்டு
- சாதி சான்றிதழ்
- நீங்க விதவையா இருந்தா இல்ல கணவனால் கைவிடப்பட்டவங்களா இருந்தா அதுக்கான சான்றிதழ்
- மாற்றுத்திறனாளியா இருந்தா அதுக்கான அடையாள அட்டை
இதையெல்லாம் வச்சு, சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி இல்லன்னா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துல நேரடியா கொண்டு போய் குடுத்துடுங்க. போஸ்ட்ல அனுப்பாதீங்க!
தமிழக அரசு அங்கன்வாடி பணியிடங்களுக்கான அரசாணை | https://drive.google.com/file/d/1nGKRA8p8iFE-pEfm5enXJASlCbQvUxFy/view |
அங்கன்வாடி பணியாளர் விண்ணப்ப படிவம் | https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Anganwadi_worker_application.pdf |
குறு அங்கன்வாடி பணியாளர் விண்ணப்ப படிவம் | https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Mini_Anganwadi_worker_application.pdf |
அங்கன்வாடி உதவியாளர் விண்ணப்ப படிவம் | https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Anganwadi_helper_application.pdf |
CDPO Address | https://www.icds.tn.gov.in/icdstn/pdf/CDPO_Address.pdf |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.icds.tn.gov.in/icdstn/career.html |
முக்கியமா ஒன்னு தெரிஞ்சுக்கோங்க: விண்ணப்பிக்கிறதுக்கு முன்னாடி, அபிஷியல் நோட்டிபிகேஷன்ல கொடுத்திருக்க எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கான்னு ஒரு தடவை செக் பண்ணிக்கோங்க. ஆல் தி பெஸ்ட்!