Job Alert: ரூ.1.6 லட்சம் சம்பளம்! தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை! எப்படி விண்ணப்பிப்பது?
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் (V.O.C Port Authority) 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, ஒப்பந்த அடிப்படையில் 08 Senior Manager மற்றும் Manager பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அழைகிறது தூத்துக்குடி துறைமுகம்
V.O.சிதம்பரநார் துறைமுக ஆணையம் (V.O.C Port Authority) 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 08 Senior Manager மற்றும் Manager பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis) நிரப்பப்படுகின்றன. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 02.01.2026 ஆகும்.
வேலைக்கான முழு விவரம்
இந்த ஆட்சேர்ப்பின் கீழ் Senior Manager (Communication and Technology), Manager (Communication and Technology), Manager (Business Development and Trade Promotion), Senior Manager (Environment Planning and Safety), Manager (Environment Planning and Safety), Manager (Corporate Legal) ஆகிய பணியிடங்கள் உள்ளன. பணியிடம் தூத்துக்குடி (Tuticorin) ஆகும். பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் அனுபவம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பப் பணியிடங்களுக்கு B.E./B.Tech (CSE / IT) முதல் வகுப்பு பட்டம் மற்றும் 5 முதல் 9 ஆண்டுகள் வரை அனுபவம் அவசியம். வணிக மேம்பாடு மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு பணியிடத்திற்கு எந்த ஒரு பட்டமும், MBA அல்லது அதற்கு இணையான முதுநிலை பட்டமும் தேவை.
சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு பணியிடங்களுக்கு Environmental Science / Safety Engineering தொடர்பான முதுநிலை தகுதி மற்றும் சம்பந்தப்பட்ட அனுபவம் அவசியம். Corporate Legal பணியிடத்திற்கு சட்டத்தில் பட்டம் மற்றும் நிறுவன சட்ட அனுபவம் தேவை.
வயது வரம்பு சம்பள விவரம்
Manager பணியிடங்களுக்கு 40 வயதிற்குள், Senior Manager பணியிடங்களுக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியமாக Manager பணியிடங்களுக்கு மாதம் ரூ.1,20,000 மற்றும் Senior Manager பணியிடங்களுக்கு ரூ.1,60,000 வழங்கப்படும். தேர்வு முறை கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, சமீபத்திய புகைப்படம் ஒட்டி, கல்வி, அனுபவம் மற்றும் வயது சான்றிதழ்களின் சுயசான்றளிக்கப்பட்ட நகல்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Secretary,
V.O. Chidambaranar Port Authority,
Admin Office Building,
Harbour Estate, Tuticorin – 628004.

