- Home
- Career
- கனரா வங்கியில் வேலை வேண்டுமா? 3500 பணியிடங்கள்! தேர்வு, நேர்காணல் இல்லாமலே வேலை... Canara Bank
கனரா வங்கியில் வேலை வேண்டுமா? 3500 பணியிடங்கள்! தேர்வு, நேர்காணல் இல்லாமலே வேலை... Canara Bank
Canara Bank கனரா வங்கியில் 3500 Graduate Apprentices பணிக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு கிடையாது, அக்டோபர் 12, 2025-க்குள் விண்ணப்பிக்கலாம்.

கனரா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி, நாடு முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது டிகிரி முடித்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. இந்த பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரங்கள் மற்றும் கல்வித்தகுதி
• பதவி: Graduate Apprentices
• காலியிடங்கள்: 3500
• சம்பளம்: மாதம் ரூ.15,000
• கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தப் பிரிவிலும் பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும். 01.01.2022 முதல் 01.09.2025-க்குள் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு மற்றும் விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பதாரரின் வயது 20-லிருந்து 28-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) 10 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
• விண்ணப்பக் கட்டணம்:
o SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) - கட்டணம் இல்லை
o மற்ற பிரிவினருக்கு - ரூ.500
Canara Bank தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறை
இந்த அப்ரண்டிஸ் பணிகளுக்கு எந்த எழுத்துத் தேர்வும் கிடையாது. விண்ணப்பதாரர்களின் பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் Short Listing செய்யப்படும். அதன்பிறகு, சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification) நடைபெறும்.
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், கனரா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://canarabank.bank.in/ மூலம் அக்டோபர் 12, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 23, 2025 முதல் தொடங்குகிறது. இந்த அருமையான வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பியுங்கள்.