சிடெட் (CTET) தேர்வர்களே உஷார்! உங்கள் தேர்வு தேதி மாறியிருக்கலாம் - உடனே செக் பண்ணுங்க.
CTET சிபிஎஸ்இ சிடெட் பிப்ரவரி 2026 தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதிக விண்ணப்பங்கள் காரணமாக இப்போது தேர்வு இரண்டு நாட்கள் நடைபெறும். தாள் 1 மற்றும் தாள் 2-க்கான புதிய நேர அட்டவணை உள்ளே.

CTET
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), பிப்ரவரி 2026-ல் நடைபெறவுள்ள மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (CTET) தேதிகளில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. முன்னதாக பிப்ரவரி 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்வெழுத விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், நிர்வாக வசதிக்காகத் தேர்வு இப்போது பிப்ரவரி 7 (சனிக்கிழமை) மற்றும் பிப்ரவரி 8 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்வு அட்டவணை (New Paper-wise Timetable)
இரண்டு நாட்களிலும் தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வுகள் இரண்டு ஷிப்டுகளாக (Shifts) நடைபெறும். அதன் விவரம்:
பிப்ரவரி 7, 2026 (சனிக்கிழமை):
o தாள் II (Paper II): காலை 09:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.
o தாள் I (Paper I): பிற்பகல் 02:30 மணி முதல் மாலை 05:00 மணி வரை.
பிப்ரவரி 8, 2026 (ஞாயிற்றுக்கிழமை):
o தாள் II (Paper II): காலை 09:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.
o தாள் I (Paper I): பிற்பகல் 02:30 மணி முதல் மாலை 05:00 மணி வரை.
ஹால் டிக்கெட் எப்போது?
தேர்வு நகரத்தை அறிவிக்கும் 'City Intimation Slip' ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இறுதி ஹால் டிக்கெட்டுகள் (Admit Cards) தேர்வு தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது பிப்ரவரி 5 அல்லது 6-ம் தேதி வாக்கில் ctet.nic.in இணையதளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்கள் கவனிக்க வேண்டியவை
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு எந்தத் தேதியில், எந்த ஷிப்ட்டில் தேர்வு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைத் தங்கள் ஹால் டிக்கெட்டில் கவனமாகச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். தேர்வு தொடங்குவதற்கு 120 நிமிடங்களுக்கு முன்பே தேர்வு மையத்திற்குச் செல்லுமாறு சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

