- Home
- Career
- Job Alert: ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை.! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
Job Alert: ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை.! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
மத்திய அரசின் பாதுகாப்புத் துறை நிறுவனமான AVNL 130-க்கும் மேற்பட்ட ஜூனியர் டெக்னீசியன்,டிப்ளமோ டெக்னீசியன் மற்றும் ஜூனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்கிறது. நவம்பர் 21, 2025-க்குள் விண்ணப்பித்து இந்த அருமையான வேலை வாய்ப்பைப் பெறலாம்.

அட்டகாசமான வேலை காத்திருக்கு.!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான Armoured Vehicles Nigam Limited (AVNL) நிறுவனம், தற்போது ஜூனியர் டெக்னீசியன், டிப்ளமோ டெக்னீசியன் மற்றும் ஜூனியர் மேனேஜர் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் முக்கியமான அமைப்பாகும். சென்னையின் ஆவடி தலைமையிடமாக உள்ள இந்த நிறுவனம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆலையைக் கொண்டுள்ளது.
130-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்
தற்போது, மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள Machine Tool Prototype Factoryயில் மொத்தம் 130-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஜூனியர் டெக்னீசியன் (ஒப்பந்தம்) பிரிவில் 130 இடங்கள், மில்ரைட் (15), எலக்ட்ரிக் ஃபிட்டர் (5), எலக்ட்ரானிக் ஃபிட்டர் (25), ஃபிட்டர் (10), மெஷினிஸ்ட் (35) மற்றும் டர்னர் (35) உள்ளிட்ட பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் டிப்ளமோ டெக்னீசியன் (டூல் டிசைன்) க்கு 2 இடங்கள், ஜூனியர் மேலாளர் (சுற்றுச்சூழல் பொறியியல்) க்கு 1 இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி, சம்பளம்,விண்ணப்பக் கட்டணம்
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் தேசிய வர்த்தகச் சான்றிதழ் (NTC) அல்லது தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும். சில பிரிவுகளுக்கு டிப்ளமோ தகுதியும் தேவைப்படுகிறது.
வயது வரம்பு: அதிகபட்சம் 28 வயது. அரசின் விதிமுறைகளின்படி எஸ்சி/எஸ்டி/ஓபிசி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ.34,227 முதல் ரூ.47,610 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: பெண்கள், எஸ்சி/எஸ்டி, மாற்றுத் திறனாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கட்டணம் இல்லை. மற்றவர்களுக்கு ரூ.300.
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, குறிப்பிட்ட முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி: நவம்பர் 21, 2025. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும் – மத்திய அரசின் முக்கிய தொழில்நுட்ப வேலை வாய்ப்பு இது!