- Home
- Career
- Jobs Alert: 10th முடித்தவர்களும் எய்ம்ஸ்- இல் பணிபுரிய வாய்ப்பு.! 1,400 பேருக்கு மத்திய அரசு பணி.! கைநிறைய சம்பளம்.!
Jobs Alert: 10th முடித்தவர்களும் எய்ம்ஸ்- இல் பணிபுரிய வாய்ப்பு.! 1,400 பேருக்கு மத்திய அரசு பணி.! கைநிறைய சம்பளம்.!
AIIMS மருத்துவமனைகளில் 1,353 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் உதவி நிர்வாக அதிகாரி, கிளார்க், இன்ஜினியர் உள்ளிட்ட 52 வகை பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

1,353 காலியிடங்கள் அறிவிப்பு
மத்திய சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் நாடுமுழுவதும் புகழ்பெற்ற AIIMS (All India Institute of Medical Sciences) மருத்துவமனைகளில் பெருமளவில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரே அறிவிப்பில் 1,353 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு வேலை தேடுபவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக உள்ளது.
AIIMS – நாட்டின் முன்னணி மருத்துவ நிறுவனம்
மருத்துவக் கல்வி, ஆய்வு மற்றும் மேம்பட்ட சிகிச்சை வழங்குவதில் முன்னணியில் உள்ள AIIMS மருத்துவமனைகள் டெல்லி, பாட்னா, போபால், கவுகாத்தி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மதுரைக்கு அருகிலும் புதிய AIIMS வளாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.
52 வகை பணியிடங்கள்
மொத்த காலியிடங்கள் – 1,353
இந்த அறிவிப்பின் மூலம் கீழ்க்கண்ட 52 வகை பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன:
உதவி நிர்வாக அதிகாரி
உதவி நிர்வாக உதவியாளர்
இளைய நிர்வாக உதவியாளர் / கிளார்க்
ஜூனியர் எஞ்சினியர் (சிவில் / எலக்ட்ரிக்கல்)
கேஷியர்
ஜூனியர் அக்கவுண்ட் ஆபிசர்
லேப் அசிஸ்டண்ட்
டிரைவர்
ரிசப்ஷனிஸ்ட்
ஜூனியர் வார்டன்
ஹவுஸ் கீப்பர் மேலும் பல தொழில்நுட்ப மற்றும் நிர்வாக துறைகளில் பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி
பணியிடத்தைப் பொறுத்து தேவையான கல்வித் தகுதி மாறுபடும்:
10ம் வகுப்பு
12ம் வகுப்பு
டிப்ளமோ
டிகிரி
என்ஜினியரிங்
உதாரணமாக, ஜூனியர் எஞ்சினியர் (எலக்ட்ரிக்கல்) பதவிக்கு எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் டிகிரி கட்டாயம்.
சம்பள விவரம்
பதவியைப் பொறுத்து சம்பள வரம்பு
குறைந்தபட்சம் : ₹18,000
அதிகபட்சம் : ₹1,51,100
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது : 18 வயது
அதிகபட்ச வயது : 35–40 வயது (பதவிக்கேற்ப மாறுபடும்)
வயது தளர்வு
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்
கணினி வழி தேர்வு (CBT)
திறன் தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பக் கட்டணம்
பொதுவாக / OBC – ₹3,000
SC / ST / EWS – ₹2,400
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பம் ஆன்லைன் மூலம் மட்டுமே செய்ய வேண்டும்.
கடைசி தேதி : 02.12.2025
தேர்வு தேதி : 22.12.2025 முதல் 24.12.2025 வரை
விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கவனமாகப் படித்து உறுதிசெய்ய வேண்டும்.