- Home
- Career
- சொந்த ஊரில் சூப்பர் வேலை..! இளைஞர்களுக்கு ஜாக்பாட்..! ரூ.6 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு!
சொந்த ஊரில் சூப்பர் வேலை..! இளைஞர்களுக்கு ஜாக்பாட்..! ரூ.6 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு!
இளைஞர்கள் சொந்த ஊரிலேயே சூப்பரான வேலை பார்க்கும் வகையில் தமிழக அரசு ரூ.6 லட்சத்தை வழங்குகிறது. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.

TN Govt's ₹6L Subsidy for Youth in Agriculture
தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காகவும், விவசாயத்தை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கும் திட்டம் தொடங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிற இடுபொருட்களை ஒரே இடத்தில் கொண்டு வரும் வகையிலும், விவசாய உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் பயிர் மேலாண்மையில் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையிலும் உழவர் நல சேவை மையங்கள் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
சொந்த ஊரில் உழவர் வேளாண் மையங்கள்
அதன்படி வேளாண்மை தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்த இளைஞர்களின் பட்டறிவும் தொழில்நுட்பத்திறனும் உழவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் ஆயிரம் எண்ணிக்கையில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே உழவர் நல சேவை மையத்தை அமைத்துக் கொள்ளலாம். ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பிலான உழவர் நல சேவை மையங்கள் அமைத்திட 30 சதவீத மானியமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை தமிழக அரசு வழங்கும்.
ரூ.6 லட்சம் மானியம் வழங்கும் தமிழக அரசு
ரூ.10 லட்சம் முதலீட்டில் அமைக்கப்படும் உழவர் நல சேவை மையத்திற்கு மானியமாக ரூ.3 லட்சமும், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் சேவை மையத்திற்கு ரூ.6 லட்சமும் மானியமாக வழங்கப்படும். பயனாளிகள் தங்களது விண்ணப்பங்களை நேரடியாக வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.இதில் 30 சதவீத பயனாளிகள் பெண்கள் மற்றும் ஆதி திராவிடர் பழங்குடியினராக இருக்க வேண்டும்.
இளைஞர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் 20 முதல் 45 வயதுக்கு உட்பட்ட வேளாண் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்த நபர்கள் வங்கிகளில் தங்களுடைய விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம். வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெற்ற பின்பு மானிய உதவி பெற https/www.tnagrisnet.tn.gov.in/KaviaDPscheme-register என்ற இணையதளத்தில் 6 உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பான விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.