MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • வறுமை விரட்டிய கல்வி, 37 ஆண்டுகளுக்குப் பின் தொடரும் வைராக்கியம்: 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய முதியவர்!

வறுமை விரட்டிய கல்வி, 37 ஆண்டுகளுக்குப் பின் தொடரும் வைராக்கியம்: 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய முதியவர்!

1989-ஆம் ஆண்டு தனது 10-ம் வகுப்புப் படிப்பைப் பாதியில் கைவிட்ட மேகாலயாவைச் சேர்ந்த 59 வயதான சில்வெஸ்டர் ஷாடப், 37 ஆண்டுகளுக்குப் பிறகு மேகாலயா அரசின் '2-ம் வாய்ப்புக் கற்றல் திட்டம்' மூலம் மீண்டும் கல்வி கற்கும் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 03 2026, 04:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
59 வயதில் 10 ம் வகுப்பு தேர்வு
Image Credit : X

59 வயதில் 10-ம் வகுப்பு தேர்வு

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், மேகாலயாவை சேர்ந்த 59 வயதான சில்வெஸ்டர் ஷாடப் , குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக 1989-ஆம் ஆண்டு பாதியில் நிறுத்திய தனது பள்ளிப் படிப்பை 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்துள்ளார். மேகாலயாவின் ரி போய் (Ri Bhoi) மாவட்டத்தில் உள்ள தாட்ராங் உம்ஞெம் கிராமத்தைச் சேர்ந்த இவர், அம்மாநில அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வை எழுதத் தீவிரமாகத் தயாராகி வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
2-ம் வாய்ப்புக் கற்றல் திட்டம்!
Image Credit : X

2-ம் வாய்ப்புக் கற்றல் திட்டம்!

பல்வேறு குடும்பச் சூழ்நிலைகள், பொருளாதாரக் காரணங்கள், ஆரம்பகாலத் திருமணம் அல்லது புவியியல் ரீதியான தடைகளால் பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிட்டவர்கள் மீண்டும் தங்களது கல்வியைத் தொடர்வதற்காக மேகாலயா அரசு '2-ம் வாய்ப்புக் கற்றல் திட்டம்' எனும் சிறப்பு முன்னெடுப்பை அமல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள 9,767 பேரில், 59 வயதான சில்வெஸ்டர் ஷாடப் தான் மிக மூத்த விண்ணப்பதாரர் ஆவார்.

34
நிறைவடையாத கனவு
Image Credit : X

நிறைவடையாத கனவு

தனது கல்விப் பயணம் குறித்துப் பேசிய சில்வெஸ்டர் ஷாடப்"பொருளாதார நெருக்கடி காரணமாக என்னால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனது. அப்போது எனது குடும்பத்தைக் காப்பாற்றுவதே பள்ளிக்குச் செல்வதை விட முக்கியமாக இருந்தது. ஆண்டுகள் பல கடந்தாலும், ஏதோ ஒன்றை பாதியில் விட்டுவிட்ட உணர்வு எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. 59 வயதில் 10-ம் வகுப்பை முடிக்க எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாடப் புத்தகங்களை ஏந்துவது அவருக்குப் பல சவால்களை ஏற்படுத்தியுள்ளது. அவர் படித்த காலத்தில் இருந்த பாடத்திட்டங்கள் தற்போது பெருமளவில் மாறியுள்ளதால், புதிய பாடங்கள் மற்றும் கற்றல் முறைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு தேர்வுக்காகத் தீவிரமாகப் படித்து வருகிறார்.

44
ஆயிரக்கணக்கானோருக்கு மறுவாழ்வு
Image Credit : X

ஆயிரக்கணக்கானோருக்கு மறுவாழ்வு

மேகாலயா அரசு, மேகாலயா பள்ளி இடைநிலைக் கல்வி வாரியம் (MBOSE) மற்றும் வளரிளம் பருவத்தினரின் நலனுக்கான அமைப்பு (MPOWER) ஆகியவை இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. மேகாலயாவின் 12 மாவட்டங்களிலும் உள்ள 171 கற்றல் மையங்கள் மூலம் இத்திட்டம் செயல்படுகிறது. ரி போய் மாவட்டத்தில் மட்டும் 690 தனியார் விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்புத் தேர்வுக்குப் பதிவு செய்துள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பிறகு, இம்மாணவர்கள் மேல்நிலைக் கல்வி, தொழிற்கல்வி மற்றும் திறன் பயிற்சிகளில் சேருவதற்கும் வழிகாட்டப்படுகிறது.

தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) கொள்கைகளான 'நெகிழ்வுத்தன்மையுள்ள கற்றல்' மற்றும் 'வாழ்நாள் முழுவதுமான கற்றல்' ஆகியவற்றிற்கு ஏற்ப இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. 37 ஆண்டுகளுக்கு முன்பு கைவிட்ட ஒரு கனவை 59 வயதில் மீண்டும் துரத்தும் சில்வெஸ்டர் ஷாடப்பின் இந்தப் பயணம், இளைஞர்களுக்கும் கல்வி கற்கத் தயங்கும் பலருக்கும் மிகப்பெரிய ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

About the Author

KD
Kiruthickraj D
தொழில்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Hike 2026: அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு! ஜூலையில் அரியர்ஸ்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விபரம்!
Recommended image2
8th Pay Commission: 2027-ல் புதிய சம்பளம் வந்தால் நிலுவைத்தொகை எவ்வளவு? முழு கணக்கீடு இதோ
Recommended image3
Govt Scheme: ரூ.10 லட்சம் வரை கடன் + 50% மானியம்! ஏற்கனவே தொழில் செய்பவர்களுக்கு ஜாக்பாட்.!
Related Stories
Recommended image1
DA Hike 2027: மத்திய அரசு ஊழியர்களுக்கு 65% அகவிலைப்படி கிடைக்குமா? சம்பளம் எவ்வளவு உயரும்?
Recommended image2
8ம், 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை.. தேர்வு இல்லை! ரூ.20,000 வரை சம்பளம்.. கடைசி தேதி இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved