- Home
- Business
- DA Hike 2027: மத்திய அரசு ஊழியர்களுக்கு 65% அகவிலைப்படி கிடைக்குமா? சம்பளம் எவ்வளவு உயரும்?
DA Hike 2027: மத்திய அரசு ஊழியர்களுக்கு 65% அகவிலைப்படி கிடைக்குமா? சம்பளம் எவ்வளவு உயரும்?
DA Hike 2027: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜனவரி 2027 அகவிலைப்படி 65% ஆகுமா? ஆகஸ்ட் 2026 CPI-IW தரவு, 65.05% கணக்கீடு, ₹18,000 மற்றும் ₹44,900 Basic Pay-க்கு எவ்வளவு DA உயரும் என்பது உள்ளிட்ட முழு விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

காத்திருக்க தேவையில்லை.! கையிக்கு வந்துடும்.!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொடர்பாக முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. ஜனவரி 2027-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு DA கிடைக்கும் என்பதை கணக்கிடுவதில், தற்போது வெளியாகியுள்ள ஆகஸ்ட் 2026-க்கான CPI-IW தரவு முக்கிய பங்கு வகிக்கிறது.
தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Labour Bureau வெளியிட்டுள்ள தரவின்படி, ஆகஸ்ட் 2026-க்கான அகில இந்திய தொழிலாளர் நுகர்வோர் விலை குறியீடு (CPI-IW) 154.4 ஆக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் 153.2 ஆக இருந்த குறியீடு, ஆகஸ்டில் 1.2 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் CPI-IW உயர்வு
CPI-IW என்பது தொழிலாளர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மாற்றத்தை அளவிடும் முக்கியமான குறியீடாகும். இந்தக் குறியீடு ஊதியம் மற்றும் அகவிலைப்படி தொடர்பான கணக்கீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாத CPI-IW 154.4 ஆக உயர்ந்திருப்பதால், ஜனவரி 2027-க்கான DA கணக்கீட்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
65% DA கிடைக்குமா?
7வது ஊதியக் குழு அடிப்படையிலான கணக்கீட்டின்படி, ஜனவரி 2027 DA-வை கணக்கிடுவதற்கு குறிப்பிட்ட 12 மாத CPI-IW சராசரி பயன்படுத்தப்படுகிறது. செப்டம்பர் 2025 முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான 12 மாத தரவுகளை எடுத்துக்கொண்டால், சராசரி CPI-IW சுமார் 149.82 ஆக வருகிறது. இதனை 7வது ஊதியக் குழு கணக்கீட்டில் பயன்படுத்தப்படும் 2.88 linking factor உடன் கணக்கிட்டால், தற்போதைய ஓட்டக் கணக்கீட்டில் DA சுமார் 65.05% என்ற அளவுக்கு வருகிறது. இந்தக் கணக்கீடு ஆகஸ்ட் மாத தரவு வரை மட்டுமே என்பதால், இது இறுதி DA சதவீதம் கிடையாது.
இன்னும் 4 மாதங்கள் முக்கியம்
ஜனவரி 2027-க்கான DA-வை இறுதியாக கணக்கிட, செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் 2026 ஆகிய நான்கு மாதங்களுக்கான CPI-IW தரவுகள் தேவை. இந்த மாதங்களில் CPI-IW தொடர்ந்து உயர்ந்தால், இறுதி DA கணக்கீடு தற்போதைய 65.05% அளவைவிட அதிகமாக இருக்கலாம். அதே நேரத்தில் குறியீடு குறைந்தால், தற்போதைய கணக்கீட்டைவிட DA குறைவாகவும் அமைய வாய்ப்பு உள்ளது. எனவே, 65% DA என்பது இப்போதைய கணக்கீட்டின் அடிப்படையிலான எதிர்பார்ப்பு மட்டுமே; அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல.
ரூ.18,000 Basic Pay-க்கு எவ்வளவு அதிகரிக்கும்?
₹44,900 அடிப்படை சம்பளம் (Basic Pay) கொண்ட ஒரு மத்திய அரசு ஊழியருக்கு, அகவிலைப்படி (DA) 60%-லிருந்து 65%-ஆக உயரும் போது மாத சம்பளத்தில் குறிப்பிடத் தக்க உயர்வு ஏற்படும். 60% DA ஆக இருக்கும் போது அவர்களின் அகவிலைப்படித் தொகை ₹26,940 ஆக இருக்கும். அதுவே DA 65%-ஆக உயரும் போது அத்தொகை ₹29,185 ஆக அதிகரிக்கும். இதன் மூலம், அகவிலைப்படி 5% உயர்வினால் அவர்களின் மாதந்திர DA தொகையில் ₹2,245 (₹29,185 - ₹26,940) நிகர அதிகரிப்பு ஏற்படும்.
ரூ.44,900 Basic Pay என்றால்?
ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் (Basic Pay) ₹44,900 ஆக இருக்கும்போது, அகவிலைப்படி (DA) 60%-லிருந்து 65%-ஆக உயரும் போது மாத சம்பளத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படும். தற்போது 60% அகவிலைப்படியின் படி அவர்களுக்கு ₹26,940 (₹44,900 × 60%) அகவிலைப்படியாகக் கிடைக்கும். இதுவே அகவிலைப்படி 65%-ஆக உயர்த்தப்படும் போது அத்தொகை ₹29,185 (₹44,900 × 65%) ஆக அதிகரிக்கும். இதன் மூலம், அகவிலைப்படி 5% உயர்வினால் அவர்களின் மாதாந்திர அகவிலைப்படி தொகையில் ₹2,245 (₹29,185 - ₹26,940) நிகர அதிகரிப்பு ஏற்படும்.
சம்பளம் முழுவதும் ரூ.900 அல்லது ரூ.2,245 மட்டும் உயருமா?
இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். மேலே கூறப்பட்ட தொகைகள் DA பகுதியில் ஏற்படும் மாற்றம் மட்டுமே. ஒருவரின் மொத்த சம்பளத்தில் HRA, TA, பிற அலவன்ஸ்கள், கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதால், கையில் கிடைக்கும் நிகர சம்பள உயர்வு இதே தொகையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
ஜனவரி 2027 DA-வை நிர்ணயிப்பதில் செப்டம்பர் முதல் டிசம்பர் 2026 வரையிலான CPI-IW தரவுகள் முக்கியமானவை. இந்தத் தரவுகள் முழுமையாக வெளியான பிறகே ஜனவரி 2027-க்கான DA உயர்வு தொடர்பான இறுதி நிலவரம் தெளிவாகும்.
தற்போதைய ஆகஸ்ட் தரவு மட்டும் பார்க்கும்போது, 65% என்ற அளவு கணக்கீட்டில் வந்துள்ளது. ஆனால் இது அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 65% DA அல்ல.
எனவே, மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த நான்கு மாத CPI-IW தரவுகளையும் கவனிக்க வேண்டியது அவசியம். ஆகஸ்ட் மாதத்தில் CPI-IW 154.4 ஆக உயர்ந்திருப்பது ஜனவரி 2027 DA கணக்கீட்டுக்கு முக்கியமான முன்னேற்றமாக உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

