MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Job Opening: 3 ஆயிரம் பேரை தட்டித் தூக்கும் IOCL.! 10th, 12th முடித்தவர்களுக்கும் அடிக்க போகுது லக்.!

Job Opening: 3 ஆயிரம் பேரை தட்டித் தூக்கும் IOCL.! 10th, 12th முடித்தவர்களுக்கும் அடிக்க போகுது லக்.!

இந்திய எண்ணெய் கழகம் (IOCL) 2025-ஆம் ஆண்டுக்கு இந்தியா முழுவதும் 2757 அப்ரண்டிஸ் பணியிடங்களை அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ, மற்றும் பட்டதாரிகள் 28.11.2025 முதல் 18.12.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Nov 28 2025, 12:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
IOCL Recruitment 2025 – 2757 Apprentice பணியிடங்கள் வெளியீடு
Image Credit : iocl.com

IOCL Recruitment 2025 – 2757 Apprentice பணியிடங்கள் வெளியீடு

இந்திய எண்ணெய் கழகம் (IOCL) 2025ஆம் ஆண்டுக்கான பெரும் வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ரெஃபைனரி பிரிவுகளில் மொத்தம் 2757 Apprentice பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய அரசு வேலை வாய்ப்பாக இது பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதாக கருதப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான காலம் 28.11.2025 முதல் 18.12.2025 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை மற்றும் காலியிட விவரங்கள்

IOCL அமைப்பின் கீழ் Apprentice Training கோட்டகையில் இந்த பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Guwahati, Barauni, Gujarat, Haldia, Mathura, Panipat, Digboi, Bongaigaon, Paradip போன்ற ரெஃபைனரி பிரிவுகளில் Attendant Operator, Fitter, Boiler, Technician Apprentice, Secretarial Assistant, Accountant, Data Entry Operator போன்ற பல்வேறு துறைகளில் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தகுதி மற்றும் கல்வித் தகுதி விவரங்கள்

இந்த பணிக்கான கல்வித் தகுதி பணியினைப் பொறுத்து மாறுபடுகிறது. B.Sc, Diploma in Engineering, ITI, B.Com, B.A, B.Sc போன்ற பட்டதாரிகள் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். Chemical, Mechanical, Electrical, Instrumentation, Petrochemical, Data Entry போன்ற துறைகளில் தகுதி பெற்றிருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

22
ஊதியம் மற்றும் தேர்வு செயல்முறை
Image Credit : our own

ஊதியம் மற்றும் தேர்வு செயல்முறை

வயது வரம்பு மற்றும் தளர்வு

விண்ணப்பிக்கும் தேதி நிலவரப்படி பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசின் விதிப்படி SC/ST, OBC மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PwBD) பிரிவினருக்கு தகுந்த வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது. Ex-Servicemen க்கும் அரசு கொள்கை படி விடுபட்ட வயது வரம்புகள் உண்டு.

ஊதியம் மற்றும் தேர்வு செயல்முறை

அப்பிரண்டிஸ் பயிற்சிக்கான மாதாந்திர ஸ்டைபண்ட் அரசு விதிகளின்படி வழங்கப்படும். தேர்வு முறை Merit அடிப்படையில் அமையும். எழுத்துத்தேர்வு எதுவும் இல்லாமல் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு நடைபெறும் என்பது முக்கிய அம்சமாகும். இதன் மூலம் தகுதியானவர்களுக்கு பெரிய வாய்ப்பு கிடைக்கும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம்

விண்ணப்பதாரர்கள் முதலில் NAPS அல்லது NATS தளத்தில் பதிவு செய்து அதன் பின் IOCL அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்ய வேண்டிய தளம்: iocl.com/apprenticeships. 28.11.2025 காலை 10.00 மணிக்கு விண்ணப்பம் தொடங்கி, 18.12.2025 மாலை 05.00 மணிக்கு முடிவடைகிறது.

முக்கிய தேதிகள் மற்றும் ஆவண சரிபார்ப்பு

விண்ணப்ப தொடங்கும் நாள் 28.11.2025 என்றும், நிறைவு தேதி 18.12.2025 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவண சரிபார்ப்புக்கான பட்டியல் 27.12.2025 அன்று வெளியிடப்படும். ஆவண சரிபார்ப்பு 02.01.2026 முதல் 07.01.2026 வரை நடைபெறும் என IOCL அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

அரசு வேலைக்கான சிறந்த வாய்ப்பு

இந்த IOCL Apprentice Notification 2025 மத்திய அரசு வேலை வாய்ப்பாகும். திறமையானவர்களுக்கு நாட்டின் முக்கியமான எண்ணெய் கழகத்தில் பணிபுரியும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. எனவே தகுதியுள்ளவர்கள் அவசியம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

Related Articles

Related image1
Job Alert: அண்ணா பல்கலையில் காத்திருக்கும் அரிய வேலை வாய்ப்பு! சுளையாய் ரூ.60,000 சம்பளம்
Related image2
Job Vacancy: வேலைக்கு அழைக்கிறது தமிழக அறநிலையத்துறை.! ரூ.1.20 லட்சம் வரை சம்பளம்.!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Job Alert: அண்ணா பல்கலையில் காத்திருக்கும் அரிய வேலை வாய்ப்பு! சுளையாய் ரூ.60,000 சம்பளம்
Recommended image2
Job Vacancy: வேலைக்கு அழைக்கிறது தமிழக அறநிலையத்துறை.! ரூ.1.20 லட்சம் வரை சம்பளம்.!
Recommended image3
கோவிலில் வேலை பார்க்க ஆசையா? 10-வது படித்தால் போதும்.. தேர்வு கிடையாது!
Related Stories
Recommended image1
Job Alert: அண்ணா பல்கலையில் காத்திருக்கும் அரிய வேலை வாய்ப்பு! சுளையாய் ரூ.60,000 சம்பளம்
Recommended image2
Job Vacancy: வேலைக்கு அழைக்கிறது தமிழக அறநிலையத்துறை.! ரூ.1.20 லட்சம் வரை சம்பளம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved